பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

தமிழர் பண்பாடு


‘'யாங்குச் செய் வாம்கொல்! தோழி! பொன்வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங்கல் நாடனொடு இரும்புனத்து அல்கிச்,
செவ்வாய்ப் பைங்கிளி ஒப்பி; அவ்வாய்ப்
பெருவரை அடுக்கத்து அருவி ஆடிச்
சாரல் ஆரம் வண்டுபட நீவிப்
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறுநனி
அரிய போலக் காண்பேன்; விரிதிரைக்
கடல்பெயர்ந்த தனைய வாகிப்
புலர் பதம் கொண்டன, ஏனல் குரவே.”
                    - நற்றிணை : 259

பாலைநிலத்தில்


பாலை நிலத்தில் மிக எளிதில் கிடைக்கும் உணவு, விளாம்பழம், “நிலம் பிளவுபடுமாறு மண்ணுள் இறங்கிய வேறாம், பெரிய கிளைகளும், உடும்புகள் அணைந்து கிடப்பது போலும் பொரிந்த செதில்களும் உடைய மிக உயர்ந்த விளாமரத்தின் கிளைகளிலிருந்து அறுபட்டுப் பச்சைக்கம்பளத்தை விரித்தாற்போலும் பசும்புல் விளைந்து கிடக்கும் நிலத்தின் மீது, இளம் சிறார்கள் ஆடி விடுத்த பந்து கிடப்பது போல் வீழ்ந்து பரந்து கிடக்கும் விளாங்கனிகளாம் . உணவு”. பாலை நிலத்து மக்கள், விளாங் கனிகளைத் தங்களுடைய முக்கிய உணவாக மேற்கொள்வர்.

‘'பார்பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு
உடும்பு அடைந்த நெடும்பொரி விளவின்
ஆட்டொழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு
கம்பலத் தன்ன பைம்பயிர் தாஅம்
வெள்ளில் வல்சி”
           - நற்றிணை : 24:1-5

மேய்ச்சல் நிலத்தில்:

மலைநாட்டு மக்கள் நடத்துவது போன்ற இன்ப வாழ்க்கையைக் கால்நடை ஓம்புவோராகிய ஆயர்களும், முல்லை நிலத்தில் நடத்தி இன்புறுவர். புன்செய் நிலங்களாம் கொல்லைகளில் குடிவாழும் ஆயர்களுக்கு உரிமையுடைய