பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

தமிழர் பண்பாடு


திருமாலைக் குறிப்பிடுகிறது. ‘'மன்றில் குரவை பிணைந்த மால்” (1 : 2 : 2:12)

இது போலும் திறந்த வெளிகளில், அவ்வந்நிலத்துக்கே உரிய மரங்கள் வளர்க்கப்படும் பாண்டியர்க்கு உரிய மன்றத்தில் வேம்பு வளர்க்கப்பட்டு, தங்கள் தலைமாலைக்கு வேண்டும் தழை அம்மரத்திலிருந்து கொய்யப்படும். பாண்டியன் நெடுஞ்செழியன். ஊர் மன்றத்தே இருக்கும் வேம்பின் பெரிய கிளைகளில் உள்ள தளிர்களை உழிஞைக் கொடியோடு கலந்து கட்டிய தலை மாலை அணிந்து போருக்குப் புறப்பட்டான்.

மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடுமிடைந்து
செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
                        - புறம் : 76 : 4-6

வேம்பு நிற்கும் ஊர்மன்றத்தில் உள்ள குளத்துக் குளிர் நீரில் மூழ்கி அம்மரத்து ஒள்ளிய தழைகளை அணிந்து கொண்டான்: “மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி, மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து” (புறம்: 79 : 1-2) பல்வேறு நிலங்களைச் சேர்ந்த மன்றங்களில், அவ்வந்நிலத்துக்கு உரியவாய் நிற்கும் பல்வேறு மரங்களாவன. 1. பலா : “மன்றப் பலவின் மாச்சினை,” ‘'மன்றப்பலவின் மால்வரை” (புறம் : 128-1: 476:5) 2. விளாம்: ‘'மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்” : (புறம்: 181:1) 3. இலந்தை : “இரத்தி நீடிய அகன்றலை மன்றம் ; “ . “மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்” (புறம்: 34:12, 325 : 10-11) புன்னை : ‘'மன்றப் புன்னை மாச்சினை “ (புறம் : 49:8)

பொதியில், மன்றம் என்ற சொற்கள், ஊர்ப்பெரியவர்கள் ஒன்று கூடியிருந்து, ஊர் நிகழ்ச்சிகளைப் பேசித் தீர்க்கும் மரத்து நீழல், பொதுவாக ஆலமரத்து நீழல் என்றும் பொருள் படும். அம்மரம், ஊர்முகப்பில் நிற்கும். பிற்காலத்தவராய மாமூலனாரும் அத்தகு மரத்தடி மன்றம், இன்று இருப்பது, போலவே, தம் காலத்தும் இருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். ‘'முன்னூர்ப் பொதியில்” (புறம்: 390:19) “தொன்முது ஆலத்து