பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தமிழர் பண்பாடு


இது போலவே பாழுற்றுப் போன பொதியிலில் உள்ள பள்ளங்களிலிருந்து கொண்டுவந்த தண்ணீரை நற்றிணை குறிப்பிடுகிறது. ‘'மன்றத்துக் கல்லுடைப் படுவிற் கலுழி” (39 :3-4) அதே தொகை நூலில், ‘'முருங்கை மரத்தில், வேனிற் காலத்தில் காய்ந்து முற்றிய நெற்று போன்ற அழகு இல்லாத விரல்களையுடைய , அச்சம் ஊட்டும், பேரொலி எழுப்பும் வாயையுடைய பேய், வளப்பத்தைப் பண்டு உடையதாகி இருந்த ஊரின்கண் உள்ள, தெய்வத்தை வழிபட்டு இடும் பலிச்சோற்றை உண்ணுவான் விரும்பிப் பாழ்மன்றம் நோக்கி மோதி எழும்”, துன்பமிக்க மாலைப்பொழுது விளக்கப் பட்டுள்ளது.

“வேனில் முருக்கின் விளை துணர் அன்ன
மாணா விரல வல்வாய்ப் பேஎய்
மல்லல் மூதூர் மலர்ப்பலி உணீஇய
மன்றம் போழும் புன்கண் மாலை
                      நற்றிணை : 73 : 1-4

மேலும் பிற்பட்ட காலங்களில், ஊர்மன்றமாகப் பெரிய மாளிகைகள் கட்டப்பட்டு, மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறுவான் வேண்டிவரும் புலவர்களும் பிற இரவலர்களும் தங்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. மரத்தாலான பல கம்பங்களைக் கொண்ட நகர் அரங்கின் ஒரு பக்கம், பள்ளியாகப் பயன்பட்டதைப் புறநானூறு காட்டுகிறது, "பல்கால் பொதியில் ஒருசிறை பள்ளி ஆக” (புறம் : 375 : 2-3) "மன்றுபடு பரிசிலர்” (புறம்:135: 17) நகரில் உள்ள, மன்றம், பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத்திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. மன்றமும் பொதியில் போலும் இடங்களெல்லாம் பிற்காலத்தில், கோயில் தெய்வத் திருமேனிகளின் உறைவிடங்களாகிவிட்டன. "மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையிலும்" (திருமுருகாற்றுப்படை : 226) வழக்கறுக்கும் நடுவர் மன்றமாகவும் விளங்கிய உறையூர் நகர் அரங்கம், புறநானூற்றில் (220 : 7) “மூதூர் மன்றம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, என்றாலும் உரை ஆசிரியர் ஒருவர்,