பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

தமிழர் பண்பாடு


கண்காணிக்கப்பட்டன. தன் முந்தைய செல்வவளத்தையும் புகழையும் எகிப்து, ஓரளவு திரும்பப் பெற்று விட்டது. தாலமியின் நகர்வலத்தில் பிலெடெல்பஸ் நகரில் இந்திய மகளிர், இந்திய வேட்டை நாய்கள், இந்தியக் காக்கைகள், ஒட்டகங்கள் மீது ஏற்றப்பட்ட, இந்திய மணப்பொருள்கள் காணப்பட்டன.

கிரேக்க இடைத்தரகர்களும், நடுவர் இருவர் குழு ஆட்சிக்கு உட்பட்ட ரோமும்

கிறித்துவ ஆண்டு பிறப்பதற்கு முந்திய 500 ஆண்டுகளில், ஐரோப்பாவுடனான, இந்த இந்திய வணிகத்தில், கிரேக்கர்கள், பெரும் இடைத்தரகர்களாக இருந்தனர். உலகப் பெருநாடு களுக்கு இடையிலான, இந்த விரிவான வாணிகப் பண்டங் களின் தமிழ்ப்பெயர்கள், கிரேக்கப் பழங்குடியினரின் தூய கிரேக்க எல்லெனெஸ் மொழியால் (Helenes) கடன் வாங்கப் பட்டன. திருவாளர்கள் ஸோப்ஹோக்கில்ஸ், (Sophocles ) அரிஸ்டோபன்ஸ் (Aristophanes) ஆகியோர் எழுத்துக்களில், அவை இடம் பெறத் தொடங்கின. அவையாவன, தமிழ் அரிசியிலிருந்து “ஒரைஸ்” (Oryza) இலவங்கப்பட்டையாம் கருவாவிலிருந்து, ‘'கர்பியொன்'’ (Karpion) தமிழ் இஞ்சிவேர், சமஸ்கிருத ஸ்ரிங்கிடுவாரா விலிருந்து (Sringivera) “ஜிக்கி ‘பெரொஸ்” வால்மிளகைக் குறிக்கும் தமிழ் திப்பிலியிலிருந்து ‘'பெப்பெரி;” (Peperi), இது இப்போது, ஐரோப்பிய மொழிகளில், கருப்பு மிளகைக் குறிக்கவும் ஆகிவிட்டது. பண்டைக்காலத்தில் கோவை மாவட்டத்தில் தோண்டி எடுக்கப்பட்ட தமிழ் வைடூரியத்திலிருந்து ‘பெரில்லோஸ்’ (Beryllos) இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்து உரோமானியர். அவர்களுடைய, பண்டைய எளிய வாழ்க்கை முறையையே கடைப்பிடித்தனர். பகட்டு வாழ்க்கையில் அவா கொண்டிலர். ஆகவே, நடுவர் இருவர் குழு (Consular) ஆட்சியின் தொடக்க காலத்தில், இந்தியப் பண்டங்கள், உரோமாபுரியை அடையவில்லை. அந்நாட்களில், இந்தியா இறக்குமதி செய்தனவற்றில் உரோம நாணயம் இடம்