பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழர் பண்பாடு


கொண்டது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில், தூரக்கிழக்கு வணிகப் பண்டங்கள், கணிசமான அளவு, உரோமை வந்தடையலாயின்”, [Warminston J. R.A.S., 1940. page 4 sweli.]

உரோமப் பேரரசின் தொடக்கத்தில்

அகஸ்டஸ் (Augustus) எகிப்தை, கி.மு., 30இல் வெற்றி கொண்டு, இந்தியாவுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில், ஒரு நேரிடைக் கடல் வாணிக வளர்ச்சிக்கு முயன்றான். கி.மு. 25இல், ஏறத்தாழ 120 கப்பல்கள், ஹோர்மஸ்ஸிலிருந்து (Hormus), இந்தியாவுக்குப் பயணம் செய்ததைத் தாம் பார்த்ததாகத், திரு. ஸ்டிராபோ (Stabo) கூறுகிறார். [Morindle Ancient India, page 6] “இந்தியாவின் பல்வேறு நாடுகளிலிருந்து அரசியல் தூதுவர்கள் அகஸ்டஸ்பால் சென்றனர். இந்தியத் தூதுவர்கள், அடிக்கடி வந்ததாக அவனே கூறுகிறான்” [Warmington Commerce between the Roman Empire and India. page : 35] அக்காலச் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், தனித்தனித் தூதுவர்களை அனுப்பியதாக, திருவாளர் வார்மிங்டன் கூறுகிறார். (Warmington Commerce between the Roman Empire and India. p. 37] இது. அகஸ்ட ஸ் காலத்தில் இந்தியா, உரோமுடன் நடத்திய வாணிக அளவு மிகப்பெரிய அளவினதாய்ப் பெருக வழி செய்தது. இவ்வாணிகம் குறித்துத் திருவாளர் வார்மிங்டன் அவர்கள், “உரோமுக்கும் இந்தியாவுக்கு மிடையிலான வாணிக அளவை மதிப்பிட்டுப் பார்த்தால், அகஸ்டஸின் உண்மையான தொடக்கநிலை ஆட்சிக் காலத்தின் போதே, அது இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான வாணிகம் எப்போதும் இயல்பாக இருக்கும், அந்த அளவு அடைந்துவிட்ட, குறிப்பிடத்தக்க அப்பெருநிலையை நாம் கண்ணெதிராகக் காணக்கூடும். தொடக்க நாளிலிருந்தே, இந்தியப் பண்டங்களின் வருகைப் பெருக்கத்திற்குப் பேரரசின் பண்டங்களைக் கொடுத்துச் சரிஈடு செய்ய முடியாது போயிற்று. அதன் - விளைவு பண்டங்களுக்குப் பதிலாக, உரோமானியர், சென்றால் திரும்பிவராத, அடித்த நாணயப் பணங்களை