பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

181


'டவ்ரான்' (Tawron) என்ற வேட்டைநாய் குறித்துப் பாடிய இரண்டு கையறு நிலைச் செய்யுள்கள் எழுதப்பட்ட கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த, நாணற்புல் தாளினாலான கையெழுத்துப்படி ஒன்றும் கிடைத்துள்ளது". (Warmington. Page : 149) தென் இந்திய வேட்டை நாய்கள், அவற்றின் முரட்டுத்தனத்திற்காகவே நன்கு தெரிந்திருந்தன. பொதுவாக அவை, "கதநாய்" (கடுஞ்சின நாய், விரைந்தோடும் நாய்) என்றே அழைக்கப்படும். அவை, சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும். அவ்வாறு நாய் கட்டப்பட்டிருக்கும் வீட்டினுள் எவரும் எளிதில் புக இயலாது. காவலில் அத்துணைக் கடுமையானது நாய், (தொடர் படு ஞமலி" புறம் : 743) தொடர் நாயாத்த துன்னரும் கடிநகர் (பெரும்பாணாற் றுப்படை -125) தாம் குறித்துச் சென்ற பகைவர்களைத் தப்பாது வெற்றி கொள்ளவல்ல வீரர்களுக்குத் தான் குறித்த விலங்குகளைத் தப்பாது கொள்ளும் வேட்டை நாயை உவமை கூறுமளவு தென்னாட்டு வேட்டை நாய்கள் : சிறந்தனவாக மதிக்கப்பட்டன. செல் நா அன்ன கடுவிறல் சுற்றமொடு கேளாமன்னா கடவுலம் புக்கு. (பெரும்பாண் - 139-140) கரடி வேட்டையில் வேட்டை நாய்கள் பயன்படுத்தப் படுதலை, "உயர்ந்த நாகமரங்கள் அடர்ந்து, கடந்து செல்வதற்கு அரிதாகி விட்ட கவர்த்த காட்டு வழியில், சிறிய கண்ணும் பெரிய சின்னமும் உடைய ஆண் பன்றி, சேற்றில் வீழ்ந்து புரண்டதனால் சேறு பூசப் பெற்ற முதுகில் புழுதியும் படிந்திருக்க அக்கோலத்தோடு விரைந்து ஓடி, சுருக்கவலை விரித்த பிளப்பில் வீழ்ந்து பட்டதாக, அது கண்ட அளவே, வேட்டை நாய்கள், கூட்டமாக விரைந்து, வலையை அழித்து, பன்றி மீது பாய்ந்து கொன்று கொண்ட இறைச்சி போக, எஞ்சிய இறைச்சியைக் கானவர் கொண்டு செல்வர்" என்ற நற்றிணை, விளக்கமாகக் கூறியுளது:

"போகிய நாகப் போக்கரும் கவலைச்
சிறுகண் பன்றிப் பெருஞ்சின ஒறுத்தல்
சேறாடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்பசிப் படீஇயர், மொய்த்த வன்பு அழீஇக்
கோணாய் கொண்ட கொள்ளைக்