பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தமிழர் பண்பாடு


கானவர் பெயர்க்கும் சிறுகுடி.
             - நற்றிணை : 82 : 6-11)

வேட்டுவர், காட்டில் வாழ்பவராகவும், விரைந்தோடும் மான் கூட்டத்தையும், துரத்தித் தொலைக்க - வல்ல விரைவினையுடைய கடுஞ்சின நாய்களை உடையவராகவும் கூறப்பட்டு உள்ளனர். "கானுறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன்'’ (புறநானூறு : 33 :1) "மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கத நாய். வேட்டுவன்". (புறம் : 205 : 8-9) வேட்டைக்குச் சென்ற தலைவன், வேட்டை முடிவுற்றதும், வேட்டை மேற்கொண்டு மூங்கிற்காட்டினுள் நுழைந்து பரவிக் கிடக்கும் தன் வேட்டுவத் துணைவர்களையும் - வேட்டை நாய்களையும், வேட்டை முடிவுற்றது, வாருங்கள் என அழைக்கும் குறிப்போடு கொம்பு எனும் ஊது கருவியை ஊதி ஒலி எழுப்புவன்:

முந்தைய நூற்றாண்டுகளில் தொடங்கப்பட்டுவிட்ட கிளிகள், மயில்களின் ஏற்றுமதி இந்த நூற்றாண்டிலும் தொடர்ந்தது. அதில் ஐயமில்லை, கிரேக்கர்களால் ‘அஸ்பிஸ்’ (Aspis) என அழைக்கப்படும் நாகப்பாம்புகள், மலைப்பாம்பு கள், உள்ளிட்ட பாம்புகள், ஏற்றுமதி செய்யப்பட்ட பிற உயிரினங்களாம் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒன்பது அடி நீளம் பாம்பு ஒன்றை ஸ்ட்ராபோ எகிப்தில் பார்த்துள்ளார். (Warmington. Page : 157)

விலங்குதரு பொருள்கள்

இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மிகமிக முக்கியமான பொருள்களுள் ஒன்று தந்தம். கிரேக்கர்கள், தங்கள் நாகரீகத்தின் முதிர்ந்த நிலையில், உருவச்சிலைகளில், ஆடையால் மறைக்கப்படாத புறத்தோற்றப் பகுதிகளுக்கு, அதைப் பயன்படுத்தினர். முத்துக்கள், முதன்முதலில், ஜூகுர்தன் (Jugurthine) போரின்போது, உரோமுக்கு அறிமுகம் செய்யப்பட்டு, பாம்பே (Pompey) என்பவரால், இத்தாலியிலிருந்து கொண்டுவரப்பட்ட பெருங்குவியலால், மக்கள் நன்கு அறிந்த ஒரு பொருளாக ஆக்கப்பட்டது.