பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

183


"தாலமிகளின் கருவூலங்கள், அகஸ்டஸால், திரும்பக் கொண்டுவரப்பட்டபோது, அப்பேரரசின் வீழ்ச்சியில், அவை, எல்லோர்க்கும் கிடைக்கும் எளிய பொருளாயின. முத்துக்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட சிசிரோவின் (Cicero) - காலத்தில், இன்றைய நாணயம் எட்டாயிரம் பவுன் மதிப்புள்ள ஒரு முத்து ஹெஸோப்னன் (AesopwS) மகனால், மெதெல்லா (Metelia) காதிலிருந்து கழற்றப்பட்டு, வறட்சிக் காலத்தில் ஒரு பெரும் பணத்தொகையை விழுங்கினோம் என்ற மனநிறைவு கொள்வான் வேண்டி, வேண்டுமென்றே திட்டமிட்டு விழுங்கப்பட்டது. (Warmington - Page : 163 168169) கிளியோபாட்ரா, தன் மதுவில், பருகுவதற்கு முன்னர், முத்துக்களைக் கரைப்பாள் என்பது நன்கு தெரிந்த ஒன்று. அரக்கு வண்ணம் ஊட்டப்பெற்ற பருத்திகள் பர்ஷியாவுக்கு அனுப்பப்பட்டன. தன்னுடைய காலத்தில் பாரசீக அரசனுக்கு, இந்தியர்களால் செவ்வண்டிலிருந்து பெற்ற ஒரு வண்ணக் கலவையால் வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல் அனுப்பப்பட்டதாக, ஸ்தேசியாஸ் (Ctesias) குறித்து வைத்துள்ளார் (Warmington Page : 178).

எகிப்திய ஆவணங்கள், பட்டைக் குறிப்பிடவில்லை. ஆகவே, பட்டு, தாரியஸ் (Dariws), ஜெர்ஸெஸ் (Xeroxes)களின் பேரரசின் மூலமாகவே, மத்திய தரைக்கடல் பகுதியை அடைந்தது. அதன் உற்பத்தி பற்றிய சரியான விளக்கத்தை அரிஸ்டாட்டில் கொடுத்துள்ளார். பட்டு தார்களில் சுற்றப்பட்டு, அரிஸ்டாட்டில் காலத்திற்கு முன்பே இறக்குமதி செய்யப்பட்டது. டயரிலும் (Tyre) மற்ற இடங்களிலும், உடைகளாகத் தைக்கப்பட்ட நிலையில் பிளைனியின் கூற்றுப்படி, "ஒரு பெண்ணின் உடலை மூடும் அதே நிலையில், அவளுடைய இயற்கை அழகை வெளிப்படுத்தவல்லதான , உள்ளிருப்பதை வெளிக்காட்டும் மெல்லிய வலை நிகர் ஆடைகள் நெய்யப்பட்டன. (Schoff Perplus, Page: 264-265) கிரேக்க உரோமானிய எழுத்தாளர்களிடையே, பருத்திக்கும் பட்டுக்குமிடையே சிறிது கருத்துக்குழப்பம் இருந்தது. அவர்கள், அவ்விரண்டையுமே, "மரம் தரு விலங்குமயிர்", Treewool) என அழைத்துள்ளனர்.