பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

தமிழர் பண்பாடு


மரவினம் தரும் பொருள்கள்

இந்திய ஆடைகள், பாலஸ்தீனியரால், பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டதற்கிடையில், இந்தியப் பஞ்சு, அரசு நூற்பு ஆலைகளையும், சாயத் தொழிற்சாலைகளையும், பேரரசுகள், நிறுவியிருந்த ஒரு சில மதகுருக்களாலும் செயல்பட்டுவந்த, எகிப்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. எகிப்தியர், பருத்தியையும், நார் இழைகளையும் ஒன்று கலந்து பருத்தி ஊடிழையாகவும், நார், பாவு இழையாகவும், கொண்ட ஆடைகளை நெய்தனர். இந்தியப் பஞ்சு, எகிப்தில், பல்வேறு புனிதப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டது. பல்வண்ணம் ஊட்டப்பட்ட பருத்தி நூல்கள் பனோபிலிஸில் உள்ள (Panoplis) மெம்பிஸ் (Memphis) அருகே காணப்பட்டன. அந்நூல்களில் ஒருசில, அவற்றின் வடிவமைப்பில், இந்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன."(Warmington Page 212)

இலவங்கம், எகிப்திற்காக என்றே, சிறப்பாக ஒதுக்கப்பட்டது போலவே, மிளகு, பாபிலோனியா, பாரசீக வளைகுடா , வாணிகங்களில், வழக்கத்திற்கு மேலான தேவைப்படுபொருளாக இருந்தது. அதனுடைய விறுவிறுப்பான பெருந்தேவை, ‘தாரியஸ்'’ (Darius) ஆட்சியின் கீழ், பாரசீகப் பேரரசு விரிவடைந்தபோது ஏற்பட்டது எனக் கருதுவதற்குக் காரணம் உளது. இந்த வாணிகம், தென் இந்தியக் கப்பல்களில், கடல் வழியாக நடைபெற்றது. நில வழியாக அன்று, எதோப்பியரின் (Aethiopians) மேனி நிறத்தைப் பெரிதும் ஒத்த நிறம் வாய்ந்தவர். தெற்கில், பாரசீகத்திலிருந்து வெகு தொலைவுக்கு அப்பால் குடிவாழ்பவர், தாரியஸாக்கு என்றும் பணியாதவர் என்ற அளவிலேயே ஹெரோடட்டஸ், (Herodotas) திராவிடர்களைப் பற்றி அறிந்துள்ளார், (Scoff’s Periplus . Page 213) பார்த்தியா (Parthia) வின் குறுக்காக நடைபெற்ற நில வாணிகமும், தாலமிகளால் ஊக்கம் ஊட்டப்பட்ட கடல் வாணிகமும், அறுதியிட்டுக் கூறமாட்டா. ஆண்டாண்டு காலமாக ஏற்கனவே, நடைபெற்றுவந்த இலவங்கம், மற்றும் மணப்பொருள்களின் வாணிகத்தின், பெருமளவிலான |