பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

185


பெருக்கிற்கு வழி செய்து விட்டன. உரோமுக்குத் தேவைப்படும் மிளகை, இக்கால கட்டத்தில், பொயினீஷியர்களும், கார்த்திகினியர்களும் வழங்கிவந்தனர். கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரும், இந்திய மருத்தியல் - முறைகளைக் கையாண்டவருமான 'இப்போ கிராட்ஸ்' என்பார், மிளகை, "இந்திய நிவாரணி" என அழைக்கிறார். (Warmington. Page 182) அது, குளிர் காய்ச்ச லுக்கும், வெப்பக்காய்ச்சலுக்கும், பயன்படுத்தப்பட்டது. மக்கள், மரபுவழிப் பழக்க வழக்கம் குறித்த ஆராய்ச்சியில், 'ஹெரோடோடஸ்' (Herodotus) அவர் களுக்கு, இது பற்றிக் குறிப்பிடுவதற்கு எதுவும் இல்லை என்றாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டில், 'தியோப் ரஸ்டஸ்' (Theophrastus) அதை ஒரு மருந்தாக அறிந்துள்ளார். டியோஸ் கோரிடஸ் (Dioscorides) கருப்பு, வெள்ளை, வால்மிளகுகளுக்கிடையிலான வேறுபாட்டை உணர்ந்துள்ளார். (Scoff's Periplus. Page 213) இஞ்சியும் மேலை நாடுகளை அடைந்து மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. ஆனால், அது ஓர் இந்திய உற்பத்திப் பொருள் என்பதை, மேலைநாட்டவர் உணர்ந்து கொள்ளா வகையில், வெற்றிகரமாக மறைத்துவிட்ட அராபிய இடைத்தரகர்களால் கொண்டு செல்லப்பட்டது. (Warmington Page: 184) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஏன், அதற்கு முன்பேயும் எள்ளெண்ணெய், கிரேக்கர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அது இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டது. தாலமிகள் காலத்தில், அது மதிக்கத்தக்க முக்கியத்துவம் உடையதாகிவிட்டது. (Warmington Page : 206) கிரேக்கக் கோயில்களில் தேங்காய்கள், அதிசயக் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்தன வாதலின், கிரேக்கத்திற்குத் தேங்காய்களும் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. (Warmington Page : 217) ஸேபோக்கெல்ஸ் (Sophocells). அரிசி அடைகள் பற்றிப் பேசுகிறார். ஆகவே, கிரேக்கர், அரிசியையும், அதன் பெயரையும் தமிழ்நாட்டிலிருந்து பெற்றனர். பல்வேறு பயன் கருதி மரங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன. மித்ரிடேட்ஸ் மீது (Mithridates) கொண்ட வெற்றி குறித்து எடுத்த விழாவில் இந்தியக் கருங்காலி மரத்தைக் காட்சிப் பொருளாகக்