பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை

187


களாம் எனப் புராணங்கள் கூறினாலும், இவ்விரு கடவுள்களையும் ஒருசேர வழிபடும் தனிவழிபாட்டுமுறை, வட இந்தியாவில் எக்காலத்திலும் இருந்ததில்லை. ஆனால், பழந்தமிழ் இலக்கியங்கள், இதற்கான எண்ணற்ற அகச்சான்றுகளை அளிக்கின்றன. இவர்களில், முன்னவன் மாயோன் என்ற பெயரால், முல்லை நிலக்கடவுளாவன் கலப்பையைப் படைக்கலனாகவும், பனையைக் கொடியாகவும், கொண்ட, வெண்ணிறக் கடவுள் எனும் பொருளில் வாலியோன் அல்லது வெள்ளையோன் எனப்படும் பின்னவன் தொடக்கத்தில் உழவுத்தொழில் முதலில் தொடங்கப்பட்ட முல்லைக்கும், மருதத்துக்கும் இடைப்பட்ட நிலத்தின் கடவுளாவன். முன்னவன் கருப்பு வண்ணமும், பின்னவன், வெள்ளை வண்ணமும், தமிழ்ப் புவலர்களின் விருப்பத்திற்குரிய அணி நலங்களாம். கடலில் வளரும் வலம்புரிச் சங்கை ஒக்கும் நிறம் வாய்ந்த, கொலை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையும் உடையவன்" என்றும். "மாசு போகக் கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் நிறம் வாய்ந்த, வானுற உயர்ந்த கருடக்கொடி உடைய, என்றும் வெற்றியே விரும்புவோன்" என்றும், அவர்கள் முறையே பாராட்டப் பெற்றுள்ளனர்.

"கடல்வளர் புரிவனை புரையும் மேனி,
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடி யோனும்,
மண்ணுறு திருமணி புரையும் மேனி,
விண்உயர் புட்கொடி விறல் வெய் யோனும்."
                       புறநானூறு : 56:3-6

"பால் போலும் வெண்ணிறம் வாய்ந்தவன். பனைக் கொடியுடையான்" என்றும், "நீலமணியின் நிறம் வாய்ந்த திருமேனியுடையான்; ஆரியப் படையுடையான்" என்றும் அவர்கள் மேலும் பாராட்டப் பெற்றுள்ளனர்.

"பால் நிற உருவின் பனைக்கொடி யோனும்,
நீல்நிற உருவின் நேமி யோனம்"
                புறநானூறு : 58 : 14 - 15

-