பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

தமிழர் பண்பாடு


இவ்விருவர்களின் மேனி நிறங்களுக்கிடையிலான மாறுபாடு, உவமை அணிகளாகப் பரவலாக ஆளப் பட்டுளது. எடுத்துக்காட்டுக்கு : ‘'மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் : வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி, (நற்றிணை : 32:7-2) இராமாவதாரம் தவிர்த்து , திருமாலின் அவதாரங்களில், வேறு எதுவும் பழந்தமிழ் இலக்கியங்களால் குறிப்பிடப்படவில்லையாதலின், இவ்விருவரும், தென் இந்தியாவில், திருமாலின் அவதாரங்களாக அறிமுகம் ஆனவரல்லர்). பலதேவன், எப்போதும் பனஞ்சாறு பருகி வெறிகொண்டு கிடப்பன். பனைமலிந்த பகுதியில், அவன் வளர்ச்சிக்கு அது பொருந்தும். பனை, கங்கை வெளியில் வளர்வதில்லையாகவே, பலதேவ வழிபாடு கங்கைக் கரையில் உருவாகியிருத்தல் இயலாது. கடலுக்கு வெகு தொலைவில் அல்லாத, தென்னாட்டு ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியிலேயே அவ்வழிபாட்டுமுறை தோன்றியிருக்க வேண்டும்.

பலதேவனுக்கு எனக் கட்டப்பட்ட கோயில்கள் வடநாட்டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால், காவிரிப்பூம்பட்டினத்திலும், மதுரையிலும் அவனுக்கான கோயில்கள், கிருஷ்ணன் கோயிலை அடுத்தடுத்துக் கட்டப்பட்டுள்ளன.

"வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்”
                 - சிலப்பதிகாரம் : 5 : 71 - 72

புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம்”
                 சிலப்பதிகாரம் : 9:10.

“பல தேவன் திருமாலின் படுக்கையாம் அரவின், மறு அவதாரம் என்ப. அவ்வரவு நாகர்களைத் தம்மோடு இரண்டறக் கொண்டு நாகராகிவிடவே, அதுவும் திருமால் வழிபாட்டு நெறியில் இடம் பெற்றுவிட்டது. இவை புகார் நகரத்துக் கோயில்கள், மதுரையில் "மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும்” (சிலப்பதிகாரம் : 14 : 9) இவ்வெடுத்துக் காட்டுக்கள்