பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின் முதல் நுழைவு


சமஸ்கிருத நுழைவு

அகத்தியனார், தம்முடைய தமிழிலக்கணத்தை இயற்றிய போது, சமஸ்கிருத நாகரிகம், தமிழிலக்கியத்தை, முதன்முதலில் பாதிக்கத் தலைப்பட்டது. தம்முடைய மலையிடைத் தவப்பள்ளியில், உணர்ச்சிக்கு ஆட்படாத அறிவு நிலை கடந்த, தவநெறி மேற்கொள்வதைக் காட்டிலும், பாண்டி நாட்டுத் தமிழிலக்கியங்களைக் கற்பதால் உளவாம் உணர்ச்சிபூர்வ அனுபவ வாழ்க்கையால் பெரிதும் ஈர்க்கப் பட்ட, பொதியமலையில், இடங்கொண்டிருந்த இந்த அகத்தியர், அகத்தியரின் தபோவனத்தைச் சேர்ந்தவர்களில், மிகமிகப் பிற்பட்டவராவர். பிற்காலப் புராணக் கதைகளில், இவர், இவருக்கு முற்பட்ட அகத்தியர் அனைவருடைய மொத்த உருவமாக்கப்பட்டு, அவ்வகத்தியர்களின் செயல் புகழ் அனைத்தும், இந்த அகத்தியரிடத்திலேயே கொண்டு குவிக்கப்பட்டன. அவர் பெயரைச் சூழக் கட்டிவிடப் பட்டிருக்கும் கதைகளை நாம் நம்புவதானால், தமிழிலக்கியம் கூறும் அந்த அகத்தியனார், நல்லுணர்வுக்கு அப்பாற்பட்ட பொறாமை, கட்டுப்படுத்தலாகாக் கடுங்கோபங்களுக்கு ஆட்படக் கூடிய சாதாரண மனிதராவர். கதைகள், ஒருபுறம் இருக்க, தமிழின் மொழிநடை இயல்புகளில் நுணுக்கமான ஆராய்ச்சியை மேற்கொண்டு அகத்தியனார், அம்மொழி பற்றிய இலக்கணத்தை இயற்றினார் என்பது, உண்மை நிகழ்ச்சியாம். அவ்வாறு இயற்றும்போது, சமஸ்கிருத இலக்கணக் கூறுகளெல்லாம், உதாரணத்திற்குப் பெயர்ச் சொற்களோடு இணையும் ஏழு அல்லது எட்டு வேற்றுமை உருபுகள் போல்வன, எல்லா மொழிகளுக்கும் உள்ள பொது நிலையாம் என அவர் கருதுகிறார். உலக மொழிகள்,