பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தமிழர் பண்பாடு


என்பதும், ‘'தெனப்ஹீயதே'’ என்பதும் ஒன்றே. பின்னது, வேறு எம்மொழியில் மொழிபெயர்ப்பது இயலாது என்பதொன்றே, வேறுபாடு, ஆங்கிலம் சமஸ்கிருதத்தோடு உறவுடைய மொழியாயினும், "he is been” என்பது போலும் ஆட்சி, ஆங்கிலத்திலும் பொருளற்றது; நகைப்பிற்குரியது. தமிழ்ச் செயப்பாட்டு வினை அமைப்புகளை, அகத்தியனார் புகுத்தியுள்ளார். இருந்தும், "தாட்ய தெ” என்பதைப் “படு” என்ற வினைச் சொல்லை , “அடி” என்பதன் இறந்தகால வினை யெச்சத்தோடு இணைத்து, ‘'அடிக்கப்பட்டான்'’ என அவரால், மொழிபெயர்க்க முடிந்தாலும், செயப்படுபொருள். குன்றிய செயப்பாட்டு வினையினைத் தமிழுக்குக் கொண்டுவர, அவரால் முடியவில்லை. இரண்டு வினைச் சொற்களை ஒரு சொல்லாகத் தொகைப்படுத்தி, அத்தொகைச் சொல்லின் இருமூலங்களுக்கும், எழுவாய் அல்லது வினைமுதலாக வேறு வேறுபட்ட இருவர்களைக் கொள்வது, காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரணகாரிய முறையினையும், தமிழைப் பொறுத்தமட்டில், காரண காரிய முறையினை அடிப்படையாகக் கொண்ட இலக்கண விதிகளையும் மீறியதாகும். ஆதலின், ‘'அடிக்கப்படும்'’ என்பதை, “அடிக்க” (மற்றொருவன்) அடிக்கும் பொழுது. என்றும், ‘'படு” துன்பம் அனுபவி என்றும் பிரித்துக் காண்பது, தமிழின் சிறப்பியல்புக்கு முரணாம்.'’ அடிக்கப்படும்” என்பதன் மொழிநடைவடிவம், அத்தொகைச் சொல்லின் முற்பகுதி, உருபேலாப் பெயர்ச் சொல்லாக வரும், “அடிபடு “ அல்லது “அடியுண்” என்பதாம். சமஸ்கிருதச் செயல்பாட்டு வினைகளைத் தமிழில் மொழிபெயர்க்கத் தேவைப்பட்ட தாலும், அகத்தியனார் மாணவர், தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தை, “எழுத்து எனப்படுவ'’ (தொல்: எழுத்து : 1) எனப் போலிச் செயப் பாட்டு வினையோடு தொடங்குவது போலச் சமஸ்கிருத மொழியில் சிந்தித்துத், தமிழில் எழுதுவார்க்குப் பெரிதும் பயனுடையதாக அமைந்ததாலும், அகத்தியனார், இச்செயல்பாட்டு வினையினைக் கண்டுபிடித்துள்ளார். இயல்பான தமிழ்ப்பேச்சு நடையில், எந்தத் தமிழனும், எந்நிலையிலும்