பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

தமிழர் பண்பாடு


பயன்படுத்தப்படும் அராபிய எழுத்துக்கள் தவிர்த்து, இந்தியாவில் வழக்கத்தில் உள்ள எல்லா எழுத்துக்களையும் போலவே, ‘'பிராமி'’ எனப் பெயர் சூட்டப்பட்ட, அசோகன் கல்வெட்டெழுத்துக்களிலிருந்தே, உருப்பெற்றன என்பதை நாம் அறிவோம். எழுத்தில் வடிக்கப்பெற்ற தமிழ்ச் சொற்களின், இதுவரை கண்டுபிடிக்கப்படாத மிகப்பழைய மாதிரி வடிவங்களின் உதாரணங்கள், பாண்டி நாட்டு மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுக்களில் நமக்குக் கிடைக்கின்றன. இக்கல்வெட்டுக்கள், பித்துப் பிடித்து அலையும் மக்கள் கூட்டத்திலிருந்து, வெகு தொலைவில் உள்ள, இயற்கையான மலைக்குகைகளில் தங்களை அழியாப் பேரின்ப நிலையாம் நிர்வாண நிலைக்குக் கொண்டு சொல்லும், அமைதியான தவநிலையில் வாழ்ந்து வந்த பெளத்த, ஜைன முனிவர்களின் தூண்டுதலால் எழுதப்பட்டன. இக்கல்வெட்டுக்கள் நமக்குக் கிடைத்துள்ள தமிழ் எழுத்து முறை, மிகப்பழைய மாதிரி வடிவங்கள் மட்டுமன்று, பிராமி வடிவெழுத்துக்களை, மிகப் பொருத்தமுறச் சொல்வதானால், தென்னிந்திய மெளரிய வடிவெழுத்துக்களைத், தமிழ் எழுத்து நடைக்கு மேற்கொண்ட தற்காலிக முதல் முயற்சியுமாம். அவை, தனி மெய் எழுத்திற்கும், அகரமொடு இணைந்து வரும் உயிர்மெய் எழுத்திற்கும் இடையில் எளிதில் ஒலிப்பதற்கு வாய்ப்பாக, மெய் எழுத்துக்கள், அகரமொடு இணைந்தே ஒலிக்கப்படும் (மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” (தொல். எழுத்து : 13 எனத் தொல்காப்பியர் கூறுவது போல) எவ்வித வேறுபாடும் காட்டவில்லை; அதாவது மெய் எழுத்தை உணர்த்த, மேலே புள்ளி வைக்கும் முறை இன்னமும் - கொண்டு வரப்படவில்லை. ஆனால், அவை, தமிழுக்கே உரிய சிறப்பு மெய்யாம் “ழ” இரட்டித்தவழி, வலிந்தும் மூக்கொலி எழுத்தாம் “ன” கரம் முன் வரும்போது மெலிந்தும் ஒலிக்கப்படுவதும், நாக்கை உள்மடித்து ஒலித்து எழுவதுமான “ற” நகரத்திற்கு முன்வரும் முக்கொலி எழுத்தைக் குறிக்கத் தன்னால் மட்டுமே இயல்வதும், இன்றை ஒலிப்பு முறையில் புல்லொலி எழுத்தாம் “ந” கரத்திலிருந்து வேறுபாடு காண