பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

தமிழர் பண்பாடு


பெறப்பட்டதாம். "ஹெரா” என்ற அச்சொல் கிரேக்க மொழியில், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், "பருவம்” என்ற பொதுப் பொருளில் தான் வழங்கப்பட்டது. நாளின் இருபத்துநான்கு கூறுகளில், ஒவ்வொரு கூறும், ஏழு கோள்களில் ஒவ்வொரு கோளின் ஆட்சிக் கீழ், வருவதாகக் கொள்ளப்பட்ட, கி.மு. இரண்டாவது நூற்றாண்டில்தான், ‘'ஹொரா’ என்ற அச்சொல்லுக்கு, நாளின் இருபத்து நான்கு கூற்றில் ஒரு கூற்றை உணர்த்தும் பொருள் தரப்பட்டுள்ளது. ஹொரா என்ற அச்சொல், தான் உணர்த்தும் சோதிடப் பொருட்குறிப்போடு கிமு முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால், ஆட்சி செய்யப்பட்டு வந்த காந்தாரத்திற்குப் பயணம் செய்தது. சமஸ்கிருத நூலாசிரியர்கள் கிரேக்கர்களின் ஜோதிடக்கலையைக் கற்றுக் கொண்டபோது, அது, சமஸ்கிருதத்தில் இடம் கொண்டது. பின்னர், அது, தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்து விட்டது. “ஓரை’ என்ற சொல், தொல்காப்பியர் காலத்தின் மேல்வரம்பாகும். கி.பி. முதலாண்டிற்கு முன்னர்த் தமிழில் இடம்பெற்றிருக்க முடியாது என்று கொண்டால், அது, ஒரு நடுநிலை மதிப்பீடாம். தொல்காப்பியனார், தம்முடைய இலக்கண நூலில், ‘ஓரை என்ற சொல்லை ஆண்டிருந்தாலும், தமிழர்களின் பெரும்பகுதியினர், அதாவது, பார்ப்பனரல்லாதார் ஆரிய நாகரீகத்தால் அடிமை கொள்ளப்பட்டு, அதனால் கோள்கள் குறித்த வானநூல் அறிவைத் தொல்காப்பியர் காலத்துக்கு மிக மிக முற்பட்ட காலத்திலேயே பெற்றிருந்தனர்; அல்லது அதில் நம்பிக்கை - கொண்டிருந்தனர் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வானநூல் கலையோடு தொடர்புடையன, ஏழு நாட்களைக் கொண்ட வாரமும், ஒவ்வொரு நாளும் ‘ அந்தாளின் முதல் இரண்டரை நாழிகையை ஆட்சி செலுத்தும் - கோளால் பெயரிடப்படுவதுமாம். ஆகவே, வாரத்தின் நாட்களின், கோள் சார்புடைய பெயர்கள் தமிழிலக்கியங்களில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை காணப்படவில்லை.

தொல்காப்பியப் பொருளதிகாரத்திலிருந்து பெறப்படும் .