பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

207


இவையெல்லாம் அவர்களின் வேதப்புலமை, வேள்வித் தீ, ஏற்றுக் கொண்ட கொடைவளம் ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றனவேயல்லது, காதலர்களிடையே, அவர்கள் மேற்கொண்ட தூது பற்றிக் குறிப்பிடவில்லை. அகநானூற்றில் அக வேள்வி செய்தறியாத ஒரு பார்ப்பானம், "வேளாப் பார்பான்" (அகம் : 24 : 1) அரசர்களிடையே தூதுவத் தொழில் மேற்கொண்டு செல்லுங்கால், மழவர் என்ற ஆறலை கள்வரால் கொல்லப்பட்ட ஒரு பார்ப்பானும், "தூது ஒய் பார்ப்பான். மடி வெள்ளோலை... தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்" (அகம் : 337 : 7-11), குறுந்தொகையில், மணம் ஆகா இளையபார்ப்பான் ஒருவனின் உடைமைகளம், "தண்டொடு பிடித்த, தாழ்க மண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே! எழுதாக்கற்பின் நின் சொல்" (குறுந்தொகை : 156 : 3-5) கூறப்பட்டுள்ளனர். ஆனால், காதலரிடையே தூது செல்லும் செயல் எதுவும், அவற்றில் குறிப்பிடப்படவில்லை. காதலரிடையே, பார்ப்பனர் தூது செல்லும் மரபினைத் தொல்காப்பியனார், சமஸ்கிருத நாடகத்திலிருந்தே தமிழ்ப் பாக்களுக்குக் கொண்டு வந்திருப்பதால், அவர், முறையான நாடகங்கள், சமஸ்கிருதத்தில் வளர்ந்துவிட்ட பிற்காலத்தில், வாழ்ந்திருக்க வேண்டும். பாஸர (Bhasa) என்பவர்தாம், சமஸ்கிருதப் புலவர்களில் பழமையானவர். அவர், கி.மு. மூன்றாவது நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராவது இயலாது; அந்நாடக மரபைத் தொல்காப்பியனார், தம்முடைய இலக்கணத்தில் இணைத்துக் கொள்வதற்குத் துணை செய்வதற்கேற்ப, தென்னிந்தியாவை உடைய, சமஸ்கிருத நாடகங்களின், அவ்விலக்கிய மரபு, சில ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

சொல், யாப்பு உள்ளிட்ட அதன் இலக்கணங்களுக்கு ஆற்றிய முழு நிறைவான அடிப்படைப் பணியுட்பட, தமிழ் நாகரீக வளர்ச்சிக்கு, அகத்தியர் பங்கு, கூறிப் பாராட்டத்தக்க பெருஞ்செயலாகும். ஆனால், பண்டைய கட்டுக்கதையாளர்களும், இன்றைய வரலாற்று ஆராய்ச்சியாளர்களும், அற்புதத் திருவிளையாடல்களைக் கற்பித்து, அத்தூயவரை