பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியத்துள் சமஸ்கிருத நாகரீகத்தின்...

193


கட்டிவிட்ட கிபி. இரண்டாம் ஆயிரத்தாண்டில் நிகழ்ந்திருக்க வேண்டும். பாயிரம் எனப்படும் தொல்காப்பிய முன்னுரையில் நச்சினார்க்கினியர் கூறுவதே, புராணக் கதைகளில் படுமோசமானது. அகத்தியனார், தம்முடைய மாணவர், திரணதூமாக்கினியாரைத் தம் மனைவி லோபாமுத்திரையை, விதர்ப்பத்திலிருந்து பொதி மலைக்கு அழைத்துவருமாறு பணித்தார். அதே சமயம் தம் மனைவியை நான்கு கோல் அளவிற்குக் குறைவாக அணுகக்கூடாது என்றும் எச்சரித்தார். லோபா முத்திரையும், திரணதூமாக்கினியும், வெள்ளம் பெருக்கெடுத் தோடும் வைகையைக் கடக்க நேரிட்டபோது, அவள் வெள்ளத்தால் அடித்துச் செல்லாதிருக்கத் தம் கைக்கோலை நீட்டி அதைப் பற்றிக் கொள்ளுமாறு வோபா முத்திரையிடம் கூறினார். அவ்வாறே ஆற்றைக் கடக்கும் போது, வெள்ளப் பெருக்கு மிகுதியால் கோலில், ஒரு கோல் அளவே இடை வெளி இருக்க நேரிட்டது. அவ்வகையில் திரணதூமாக்கினி ஆசிரியரின் தடையுத்தரவை மீறிவிட்டார். கடுஞ்சினம் உடைய ஆசிரியர், இதைக் கேள்வியுற்றுதும், 'நீங்கள் இருவரும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" எனச் சாபம் இட்டார். அது கேட்ட மாணவரும் "நாங்கள் செய்யாத பிழைக்கு எங்களைச் சபித்த நீயும் சுவர்க்கம் புகக் கடவீர் அல்லராக" என எதிர்ச்சாபம் இட்டார். தொல்காப்பியம் இருக்க அகதக்தியம் அழிந்துவிட்டதை விளக்க இக்கதை கூறப்பட்டது போலும்.