பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

225


225மக்கள் வாழ்க்கை .... சாறும், மணல் மேட்டில் நிற்கும் தென்னையின் இனிய இளநீரும் ஆகிய மூன்று நீரையும் கலந்து குடித்துவிட்டு, மழைநீர், ஆற்றுநீர், ஊற்று நீர் என்ற முந்நீராம் கடல் நீரில் பாய்ந்து ஆடுவர்".

"நெல் அரியும் இருந்தொழுவர்,
செஞ்ஞாயிற்று வெயில் முனையின்,
தெண்கடல் திரை மிசைப் பாயுந்து,
திண்திமில் வன் பரதவர்
வெப்புடைய மட்டும் உண்டு
தண்குரவைச் சீர்தூங்குந்து!
தூவல் கலித்த தேம்பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்,
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து,
வண்டுபட மலர்ந்த தண்நறும் கானல்
முண்டகக் கோதை ஒண்தொடி மகளிர்
இரும்பனையின் குறும்பைநீரும்,
பூங்கரும்பின் தீஞ்சாறும்,
ஒங்கு மணல் குவவுத்தாழைத்
தீநீரோடு உடன் விராஅய்
முந்நீர் உண்டு. முந்நீர் பாயும்"
                    -புறம் : 24:1-16

("முந்நீர் உண்டு - (பனை நுங்கின் நீர், கரும்பின் சாறு, வெங்கின் இளநீர் - ) முந்நீர் (ஆற்றுநீர், ஊற்றுநீர், மழை நீர்) பாயும்" என்ற வரியில் அழகிய சொல்லோவியம் அமைந்திருப்பது காண்க)

தலைவனை, ஓர் இரவு தங்கித் தலைவிக்கு ஆறுதல் அளிக்குமாறு தோழி வற்புறுத்தும் ஒரு செய்யுள், நெய்தல் நிலத்து வாழ்க்கை நிலை, வாழ்க்கை முறைகள் பற்றிய மற்றொரு காட்சியைத் தருகிறது. மீன் உண்ணும் பசிய கால்களை உடைய வெண்ணிறக் கொக்குக் கூட்டம் செவ்வேள் முருகன் மார்பில் கிடந்து ஒளிவிடும் வெண் முத்தாரம் போல, செவ்வானத்தில் எழுந்து வரிசையாக பறந்து. போமாறு, பகற்பொழுதை மெல்ல மெல்லக் கழித்து விட்ட