பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

231


அத்தினைப் புனத்தைக் காத்துகிடப்பார், அவை வருவது அறிந்து ஊதும், பெரிய கொம்பின் ஓசையொடு கலந்து வந்து ஒலிக்கும் முல்லைக்காட்டின் இடையே உள்ள நாடு"

"தேம்படு சிமயப் பாங்கர்ப் பம்பிய
குவையிலை முசுண்டை வெண்பூக் குழைய
வான் எனப் பூத்த பானாள் கங்குல்,
மறித்துரூஉத் தொகுத்த பருப்புற இடையன்
தண்கமழ் முல்லை, தோன்றியொடு விரைஇ
வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்,
ஐதுபடு கொள்ளி அங்கை காயக்
குறுநரி உளம்பும் கார்இருள் நெடு விளி,
சிறுதானி பன்றிப் பெருநிரை கடிய
முதைப்புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கருங்கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்".
                   அகம் : 94 :1 - 11

"வட்டவட்டக் கண்களையும் கூரிய வாயலகையும் உடைய பெண் காக்கை, இளமையால் நடுங்கும் இறகுகளையுடைய தன் குஞ்சுகளை அனைத்தவாறே தன் இனக் காக்கைகளையும் கூவி அழைத்து, குறுகிய கால்களை நட்டுக்கட்டப் பெற்று, உணவுப் பொருட்களை நிறையச் சேர்த்து வைத்திருக்கும் மனைகளின் முன்புறத்தில் இட்டுவைத்திருக்கும், கருணைக் கிழங்கின் பொரிக்கறி யொடு கலந்த, செந்நெல் அரிசியாலான வெண்சோற்றுத் திரளைத் தெய்வங்களுக்கு இடும் பலியொடு கவர்ந்து உண்ணக் கூடியிருக்கும்"

"கொடுங்கண் காக்கைக் கூர்வாய்ப்பேடை,
ஒருங்குசிறைப் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து
கருங்கண் கருணைச் செந்நெல் வெண்சோறு
குருடைப் பலியொடு கவரிய, குறுங்கால்
கூறுடை நன்மனை குழுவின இருக்கும்"
                  - நற்றிணை : 367 51 - 5

பொதுமக்களின் இவ்வாழ்க்கை விளக்கம் வறுமையில் வாடும் ஒரு வீட்டின் படப்பிடிப்போடு முடியும். சோறு