பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ....

259


தலைவியின் சினம் பெரும்பாலும் தணிவது இல்லை. கணவன் வாயில் வேண்டிப் பாணர்நண்பனைத் தூது போக்கினும், அது பயன் அளிப்பதில்லை . சினம் மாறா ஒரு மனையாள் கூறுவது இது: பாணனே! மகப்பெற்றதனால் உற்ற வாலாமை நீங்க எழுப்பிய புகையும் படிந்து, புதல்வனுக்குத் தீட்டும் மையும் இழுகி, ஆடையும் அழுக்குப் படிந்துள்ளது. சுணங்கால் அழகு பெற்ற இளைய கொங்கையின் இனிய பால் பெருக, அது கரப்பப் புதல்வனை அணைத்துக் கொண்டமை யால் தோளும் முடை நாற்றம் வீசுகிறது. ஆகவே, இவை போல்வனவற்றால் தூய்மை கெட்டுப் போகாமல் புதுப் பொலிவோடு இருப்பவரும், நல்ல பல அணிகளை - அணிந்தவரும் ஆகிய பரத்தையர் சேரிக்கண் தேரில் திரிந்து கொண்டிருக்கும் உன் தலைவனுக்கு, நான் தகுதியுடையவள் அல்லள். அதனால், பொன்கம்பி போன்ற நரம்புகளைக் கொண்ட யாழில் எழும் இசைக்கு ஏற்ப, இன்குரல் எடுத்துப் பாடுதலில் நீ வல்லவனே ஆயினும், கருதி வந்ததைப் பெறுவான் வேண்டி, என்னைத் தொழுது பாடுவது செய்யற்க குளிர்ந்த நீர்த்துறைகளால் நிறைந்த நல்ல ஊருக்கு உரியோனாகிய உன் தலைவனை இங்கிருந்து கொண்டு சென்று விடுவாயாக. பலராலும் பாராட்டப் பெறும் தகுதியுடையதாகிய என் மனையில் இருந்து நீ பாடாதவாறு, தெருவில் நெடும்பொழுது நிற்குமாறு தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகளும் அந்நிலையை வெறுத்துக் குரல் எழுப்புகின்றன. ஆகவே, நான் விரும்பாத நிலையில், பயனில் சொற்களை மேலும் கூறிக் கொண்டு நிற்க வேண்டாம்".

”நெய்யும் குய்யும் ஆடி, மையொடு
மாசுபட் டன்றே கலிங்கமும்; தோளும்
திதலை மென்முலைத் தீம்பால் பிலிற்றப்
புதல்வற் புல்லப் புனிறுநா றும்மே;
வாலிழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேன்; அதனால்
பொன்புனை நரம்பின் இன்குரல் சீறியாழ்
எழாஅல், வல்லை ஆயினும்; தொழாஅல்,