பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

266

தமிழர் பண்பாடு


பெரியன் என்பானுக்கு உரிய, மலர் விரிந்த கொத்துக்களைக் கொண்ட புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட புறந்தை” என்றும், ‘'கள் உண்டு மகிழ்ந்திருப் பவனும், நல்ல தேர் உடையவனும் ஆகிய பெரியன் என்பானுக்கு உரிய , கள் மணக்கும் பொறையாறு” என்றும் கூறப்பட்டுளது.

“பெருந்திரை, முழக்கமொடு இயக்கு அவிந் திருந்த
கொண்டல் இரவின் இருங்கடல் மடுத்த
கொழுமீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண்சுடர்
ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை
ஆடியல் யானை அணிமுகத்து அசைத்த
ஓடை ஒண்சுடர் ஒப்பத் தோன்றும்
பாடுநர்த் தொடுத கைவண் கோமான்
பரியுடை நற்றேர்ப் பெரியன், விரியினர்
புன்னையம் கானல் புறந்தை முன்துறை”
                 - அகம் : 100 : 5- 13

‘'நறவுமகிழ் இருக்கை, நற்றேர்ப் பெரியன்
கள்கமழ் பொறையாறு”
            - நற்றிணை : 131 : 7-8

பாண்டியரின் முக்கிய துறைமுகம், கொற்கை. அது முத்துக்கள் விளைகின்ற பரந்த கடலையுடைய கொற்கை நகரத்து முன்புள்ள துறைமுகம் ; “முத்துப்படு பரப்பின் கொற்கை முன் துறை” (நற்றிணை : 23 : 6) என்றும், வீரம் செறிந்த போரில் வல்ல பாண்டியர்கள், அறநெறி கெடாது காக்கும் அழகிய கொற்கைப் பெருந்துறையில் கொள்ளும் முத்து ‘'மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும் கொற்கைஅம் ‘பெருந்துறை முத்து” (அகம் : 27 : 9-10) என்றும்; வீசும் அலைகள் கொண்டு வந்து குவிக்கும், குளிர்ந்த இனிய ஒளியினையுடைய முத்துக்கள். ஊர்பவர். விரும்புமாறு நடக்கும் குதிரைகளின் கால் வடுக்களை மறைக்கும் நல்ல தேரையுடைய பாண்டியரது கொற்கை. இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம். கவர்நடைப் புரவிக்