பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ...

267


கால்வடு தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை ' (அகம் : 130 : 9-11) என்றும், வெற்றியே காணும் போரில் வலலவர்களாய் பாண்டியரது, புகழ் மிக்க சிறப்பினையுடைய கொற்கை : முன் துறையில் கிடைக்கும் ஒளிவீசும் முத்துக்கள்: "விறல் போர்ப் பாண்டியன், புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தம்" (அகம் : 207:3-5) என்றும், கடல் நீர்ப் பரப்பில் சென்று, பல மீன்களையும் பிடிப்பவர், அவற்றுடன் சேரக்கொண்ட முத்துச் சிப்பிகளை, நாரால் வடித்து எடுக்கப்பட்ட கள்ளின், மகிழ்ச்சி மிக்க விலையாகக் கொடுக்கும். மிக்க புகழ் வாய்ந்த கொற்கை", " பரப்பில் பன் மீன் கொள்வர் முகந்த சிப்பி , நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை (அகம் : 296 : 8-10) என்றும், விளங்கும் பெரிய கடலில், எதிர்த்தாரைக் கொல்லும் சுறாமீன்களை நீக்கிவிட்டு வலம்புரிச் சங்குகளை முழ்கிக் கொணர்ந்த பெரிய மீன்பிடி . படகுகளை உடைய பரதவர், பிடித்த அச்சங்குகளின் கல்லெ னும் ஒலியினை முழுக்க ஆரவாரம் மிக்க கொற்கை நகரத்தார் வரவேற்கக் கரைசேர்வர் என்றும் பாராட்டப் பட்டுளது.

இலங்கு இரும் பரப்பின் எறிசுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்
ஒலித்தலைப் பணிலம் ஆர்ப்பக் கல் எனக்
கலிகெழு கொற்கை எதிர்கொள இழிதரும்".
                     -அகம் : 350 : 10-13

சேரர்களின் முக்கிய துறைமுகம் முசிறி . "சேரர்க்கு உரிய சுள்ளியாகிய பேரியாற்றின் வெள்ளிய நுரைகள் சிதறி விலகுமாறு, யவனர்கள் கொண்டுவந்த அழகிய வேலைப் பாட்டால் சிறப்புற்ற மரக்கலம், பொற்காசுகளோடு வந்து மிளகுப் பொதிகளோடு மீளும், வளம் மிக்க முசிறி".

சேரலர்,
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி'.