பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மக்கள் வாழ்க்கை ...

269


முற்றுத் தாமும் ஒரு சேரக் கடலில் வீழ்ந்து ஆண்டு மிதந்து வந்த ஒரு பலகையை, வீழ்த்த அனைவரும் ஒருசேரப் பற்றிக் கொண்டு, தாம் தாம் தனித்தனி இழுப்பது போல, உன் கைகளைப் பற்றி, அவரவர் நத்தம் பக்கம் இழுக்க, அவரிடை அகப்பட்டு நீ வருந்திய வருத்தத்தை நான் கண்கூடாகக் கண்டேன்: கண்ட என்னால் யாது செய்ய இயலும்?"

"கண்டனென்; மகிழ்ந! கண்டு எவன்செய்கோ?
பாணன் கையது பண்புடைச் சீறியாழ்
யாணர் வண்டின் இம்மென் இமிரும்
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி, நின்
மார்புதலைக் கொண்ட மாண் இழை மகளிர்,
கவலே முற்ற செய்து வீழ் அரிப்பனி ,
கால் ஏழுற்ற பைதடு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன்பிறப்பு
பலர் கொள் பலகை போல்
வாங்க வாங்க நின் தூங்கு அஞர் நிலையே"

         நற்றிணை : 30

இந்த அதிகாரத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பல செய்யுள்களிலும், இயல்பான அல்லது கற்பனைத் திறமான இந்தியக் கலையின் முழு முதல் மூலமாம் சிறப்பியல்புகளைத் தனியே காணலாம். இந்தியக் கலையின் நோக்கம், தொடக்க நிலையில் அழகு படுத்துவதே ; ஒன்றைப் பார்த்து, அதைப் பின்பற்றுவதன்று. கலைஞன், இலக்கியப் பொருளாகிவிட்ட இயற்கைப் பொருட்களை, 'இற்று' எனல் போல், உள்ளது உள்ளவாறே கூறிவிடுவதை விரும்பவில்ல. மாறாகத், தன் கையில் கிடைத்த அப்பொருளை அழகு செய்வதற்கான அளவிற்கு எல்லையே இல்லை. எடுத்துக் கையாண்ட பொருளின் ஒவ்வொரு சிறு கூறும், இயற்கையோடு கூடிய தாகத் தெளிவாகப் புலப்படவல்ல, அணிகளின் சிறுகூறு களால் அழகு செய்யப்பட்டிருக்கும். ஆகவே, செய்யுள் நடையில், ஒவ்வொரு பெயர்ச்சொல்லுக்கு முன்பும், ஒரு பெயரடைச் சொல் கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப் படும் இடை ஒரு தொடராக அமைந்துவிடின், அத்தொடரில்