பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தமிழர் பண்பாடு


களைகட்டலும், அரிதலும் கடாவிடுதலும். மலர் : தாமரையும் கழுநீரும். நீர்: ஆற்று நீரும், கிணற்று நீரும், குளத்து நீரும்.

நெய்தல் திணைக்குரிய உணவு உப்பு, மீன் விற்றுப் பெற்ற பண்டங்கள். மாவினம்: உப்பு மூட்டை சுமக்கும் பொதிமாடு.. மரம் : புன்னையும் ஞரழலும், கண்டலும். பறவை : கடற்காக்கை. தொழில் : மீன் பிடித்தலும், உப்பு விளைத்தலும், அவற்றை விற்றலும். மலர்: கைதையும், நெய்தலும். நீர்: மணற்கிணறும், உவர்க்குழியும்.

பாலைக்குப் பொருந்தும் உணவு : ஆலனைத்தும், சூறையாடியும் கொண்ட பொருள்கள் மாவினம்: வலுவிழந்த யானையும், புலியும், செந்நாயும். மரம்: வற்றிய இலுப்பை , ஓமை, உழிஞை, ஞெமை, பாலை கள்ளி தாழை முதலியன. பறவை : கழுகும், பருந்தும், புறாவும். தொழில் : ஆறலைத்தலும், சூறைகோடலும். மலர்கள்: மரா, குரா, பாதிரி ஆகியவை நீர்: அறுநீர்க்கூவலும் சுனையும். இப்பொருள் களும், தொழில்களும், அவ்வவற்றின் திணைகளுக்குரிய பாக்களில் இடம் பெற்றிருப்பதற்கான எடுத்துக்காட்டுகள், அடுத்துவரும் பல அதிகாரங்களில், மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் செய்யுட்களில் காணலாம்.

சமயம்

மனிதன், தொழிற்கருவிகளையும், உணவு சமைக்கும், ஆடை நெய்யும், சொல் வழங்கும் உயிரினம் மட்டுமல்லன், சமய உணர்வு வாய்ந்த உயிரினமும் ஆவான். உயிரினங்கள் அனைத்திலும், மனிதன் ஒருவன்தான், தன்னை அச்சுறுத்தும் உண்மையான அல்லது கற்பனையான இன்னல்களைத் தீர்த்துத் தான் நீண்ட காலமாக, ஆர்வத்தோடு அவரவி நிற்கும் பெரும் பொருளைக் கொடுத்தருளுமாறு எல்லா வற்றுக்கும் மேலான இறைவன் துணையை வழிபாட்டின் மூலம் வேண்டும் அல்லது வற்புறுத்தும் முறையைக் கண்டவன். இச்சமய வழிமுறைகளெல்லாம் சமயச் சார்புடைய