பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

தமிழர் பண்பாடு


அந்நீரோடு கலந்து சொரியப்பட்ட நெல்லும் மலரும் மணமகள் கூந்தலில் கிடந்து சிறக்க, திருமணச் சடங்கு இனிதே முடிவுற்ற பின்னர், அன்று இரவு, தமரகத்து மகளிர் எல்லாம் ஒன்று கூடியிருந்து, மணமகளுக்குப் புதுக்கூறை உடுத்திப் பெரிய மனைக்கிழத்தி ஆகுக’ என வாழ்த்தி அவள் காதலனோடு ஓர் அறைக்குள் அனுப்பி வைத்தனர். அவளும் நாண்தரு நடுக்கத்தோடு உள்ளே நடந்தாள்”

“உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை,
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணமல் ஞெமிரி
மனைவிளக்கு உறுத்து மாலை தொடரிக்,
கனை இருள் அகன்ற கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்,
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வன் பயந்த திதலை அவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ நற்பல உதவிப்,
பெற்றோன் பெட்கும் பிணையை ஆகுஎன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி,
பல்லிருங் கதுப்பில் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
‘பேரிற் கிழத்தி ஆகு’ எனத் தமர்தர
ஓரில் கூடிய உடன்புணர் கங்குல்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்.”
அகநானூறு 86 : 1:22

கூறிய இப்பண்டைத் தமிழ்த் திருமணச் சடங்கு முறையில், ஆரியக் கலப்பு எதுவும் அறவே இல்லை , தீ ஓம்பல் இல்லை . தீ வலம் வருதல் இல்லை . தட்சணை வாங்கப் புரோகிதர்