பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

தமிழர் பண்பாடு



பழங்கன்று கறித்த பயம் பமல் அறுகைத்
தழங்கு குரல் வானின் தலை பெயற்கு ஈன்ற
மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண்நறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் பொலிந்துமே வரத் துவன்றி
மழைபட் டன்னமணன்மலி பந்தர்
இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித்
தமர்நமக் கீத்த” அகநானூறு 36, 7-18

இவ்விரு செய்யுட்களும், நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் காலத்திலும், பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தன. ஆனால், அவை, உண்மையில், மிகமிகப் பழைய காலத்தில் நிலவியிருந்த திருமணச் சடங்கு முறைகளையே விளக்குகின்றன.

திருமண வாழ்க்கை , இவ்வாறு, நல்ல நிமித்தத்தில் தொடங்கினாலும் பெரும்பாலும், ஒரே சீரான வழியில் , ஓடியதில்லை. மண வாழ்க்கையில், உண்மையாக நடந்து கொள்வதிலிருந்து, கணவன்மார்களைத் தவறான வழிக்குத் தூண்டிவிடும் பரத்தையரின் சூழ்ச்சிகளால், கற்புக் காலத்து , அன்பு வாழ்ககை, தற்காலிக, அல்லது நிரந்தர முடிவுக்குப் பல சமயம் ஆளாக்கப்பட்டுவிடும். வயல்களில் கதிர் முற்றிக் கொண்டிருக்கும் காலத்திலும், அறுவடைக்குப் பின்னர், நிலம் தரிசாக விடப்பட்டிருக்கும் காலத்திலும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு நாட்களில் வேலையற்றுக் கிடக்கும் கைகளுக்குச் சில குறும்புகளைக் கொடுத்து விடுகிறது சைத்தான். ஆகவே, விளைநிலப் பகுதிக்கு மட்டுமே தனி உரிமை வாய்ந்த ஒன்று, பரத்தையர். ஒழுக்கமுறை. கோடையில் நீர்வேட்கை மிகுந்து நிலங்களெல்லாம் திணறும்போது, மழை மேகங்களை, இடியேறு (முருகனின் பழைய வேற்படை போலும், கல்லால் ஆன, படைக்கலம் ) எனும் படைக்கலத்தால் பிளந்து மழை பெய்யப்பண்ணும் கார்மேகத்தை ஆட்சி கொள்ளும் கடவுள், இந்நிலத்தின் தெய்வமாம். தன்னை வழிபடும் நிலஉலக ஆடவர், அந்நில