பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

55


உலகப் பரத்தையர்களால் சூழப்பட்டிருப்பது போலவே, இவனும், வானுலகப் பரத்தையர் குழாத்தால் சூழப்பட்டிருக் கும் ஒரு காமக் கடவுளாவான். பொங்கல் என அழைக்கப் படும், பருப்போடு கலந்து ஆக்கிய சோறு, இவன் மிகவும் விரும்பும் படையல், விளைநிலப் பகுதிகளில், அறுவடை விழாவாக, மக்களால், இன்றும் பெரிதும் பாராட்டப் பெறும் * விருந்துப் பெருவிழா இது.

கடைசி நிலப்பகுதி, கொள்ளைக்காரர்களின் வாழிடமாம் பாலை. அடுத்துள்ள மலைநிலத்தைப் போலவே, தாயைக் ; குடும்பத் தலைவியாகக் கொண்ட சமுதாய முறை, நெடுங்காலம் நிலை பெற்றிருக்கும் நிலப்பகுதி, இது. ஆகவே, இந்நிலத் தெய்வம். வெற்றிப் பெண் தெய்வமாம் கொற்றவை. அவள் வழிபாட்டாளராம் கொடுந்தொழில் புரியும் மறவர், அவளுக்கு, மனிதனையும், விலங்குகளையும் கொன்று குருதிப் பலி தருவர். பாலை ஒரு வறண்ட நிலம். அதற்கேற்ப காதலியின் காலடியில் சேர்ப்பதற்குப் பெரும் பொருள் தேடுவான். வேண்டி, இறந்தோர்களின் வெள்ளெலும்புகள் சிதறுண்டு கிடக்கும் மணல் பரந்த நெடு வழியில் பயணம் செய்யும் காலத்தில் காதலிகள் நெடிது பிரிந்து வாழ நேர்வதாம், காதல் அவலத்தோடு, பொறுத்த நிலையில், பெருங்களோடும் களியாட்டங்களோடும், கொற்றவை வழிபடப்படுவாள்.

இந்த ஐந்து கடவுள்களில், நான்கு கடவுள்களைத் தொல்காப்பியனார் வரிசைப்படுத்தியுள்ளார். "மாயோனால் விரும்பப்பட்டது காட்டுவளம்; சேயோனால் விரும்பப் பட்டது மலைநாடு; இனிய நீர் பாயும் புனல் நாடு, கடவுளர்க்குக் கடவுளாம் வேந்தனால் விரும்பபட்டது. வருணனால் விரும்பப்பட்டது, பெருமணல் உலகம். இந்நான்கு உலகமும், முறையே, முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல் என அழைக்கப் பெறும்".

"மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்