பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்

57


கடவுளின் வாய், தீ; ஆகவே கடவுளுக்குப் படைக்கும் அனைத்தும், கொழுந்துவிட்டு எரியும் தீக்கடவுளின் வாயில் இடுதல் வேண்டும் என்ற நம்பிக்கையை அளிக்கும் தீ வழிபாட்டு நெறி, வட இந்தியாவில், ஏறத்தாழ, கி.மு. 4000இல் உருவாகிவிட்டது. இவ்வழிபாட்டு நெறி, ஆரிய வழிபாட்டு. நெறி என அழைக்கப்பட்டது. தீ இல்லா வழிபாட்டு நெறியினைப் பின்பற்றிய பழங்குடியினர், தஸ்யூக்கள் எனப்பட்டனர். தீ வழிபாட்டு முறையினைப் பின்பற்றுவோர், தங்கள் படையலைத் தொடர்ந்து கவிவல்ல பார்ப்பனராம் ரிஷிகள் இயற்றிய மந்திரங்களை ஓதும் முறையினை மேற்கொண்டனர். சமஸ்கிருத மொழி எப்படி, எப்போது உருவாயிற்று? யார் இந்த ரிஷிகள்? என்பன கண்டுபிடித்தற்கு இயலா. நமக்குத் தெரிந்த ஒரே உண்மை , சொல் அமைப்பிலும், சொற்றொடர் அமைப்பிலும், அது மேற்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பெருநிலப்பரப்பில் பேசப்பட்டு வரும் மொழிகளோடு உறவுடையதாம் என்பது.

இவ்வுண்மையை அடிப்படையாகக் கொண்டும், இனத்திற்கும் மொழிக்கும் இடையிலான வேறுபாட்டினை உணரமாட்டா. வடிகட்டிய அறியாமையால் தூண்டப் பட்டும் மனித இயல் நூல் தன் முழு எதிர்ப்பையும் தெரிவிக்கும் ஆரியர்களின், உலகக் குடிபெயர்ச்சி என்ற தத்துவம் உருப்பெற்றது. ஆனால் வடநாட்டில், ஆரிய நாகரீகம் எழுவதற்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்கள் வாழ்க்கை - முறையினை, ஆரிய நாகரீகத் தோற்றம் எவ்வாறு மாற்றி விட்டது என்ற வினாவிற்கு, விடை காண்பது ஒன்றே ஈண்டு. நம்முடைய நோக்கம்.

அத்தொல்லூழிக் காலத்தில், தங்கள் தமிழ் உடன் பிறப்பாளர்களைப் போலவே, வட இந்திய தஸ்யூக்களும், அவ்வந்நிலத் தெய்வங்களையே வழிபட்டிருக்க வேண்டும். ஆரியத் தீ வழிபாட்டு நெறி, இந்த உள்நாட்டுக் கடவுள்களைத் தங்களுடையனவாக ஏற்றுக் கொண்டு, அவற்றைத் தங்களுடைய, புது நெறிப்படி வழிபட்டதா? இதுபற்றி