பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

தமிழர் பண்பாடு


கட்டளைகள், நீலமணிக்கல்லில்தான் செதுக்கப்பட்டன எனக் கூறுகிறார். (Scoffs’ periplus page: 171). நார்மடி ஆடைகள் எகிப்திலேயே, அக்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்டன ஆதலாலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள், அவற்றினும் உயர்தரம் வாய்ந்ததான, பிற்காலத்திற் போலவே அக்காலத்திலும் இந்தியா மட்டுமே தரக்கூடியதுமான பருத்தி ஆடைகளால் ஆனவையாதல் வேண்டும். ஆதலாலும், அரசர்க்கான உடைகள் இந்திய மஸ்ஸிலினால் தைக்கப்பட்டவையாம். வாலில்லாக் குரங்குகள், குரங்குகள், நாய்கள், சிறுத்தையின் தோல்கள் ஆகியவை பொருத்தமட்டில், ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்பொருள்களும், இவற்றிற்கு இனமான பொருள்களும், மேலை நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. ஆதலின், இறக்குமதி செய்யப்பட்ட இப்பொருள்கள் அனைத்தும் இல்லையாயினும், இவற்றில் ஒரு பகுதி, இந்தியாவிலிருந்து வந்தனவாம் என்பதில் சிறிது உண்மையிருக்கிறது. லவங்கப்பட்டையைப் பொருத்தவரை கி.மு.15 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த அட்ஷே புஸ்ட் (Hatshe pust) என்ற அரசியாரின் படையெடுப்பு குறித்த, எகிப்து மொழிக் கல்வெட்டுக்கள் எகிப்துக்குத் திரும்பக் கொண்டு வரப்பட்டுவிட்ட, புன்ட் நாட்டின் அற்புதங்களில் ஒன்று, லவங்கப்பட்டை மரம் எனக் குறிப்பிடுகின்றன என்ப து குறிப்பிடப்படலாம். (Scoff’s periplus Page: 82). ஆனால், லவங்கப்பட்டை குறித்த வாணிகத்தின் ஏகபோக உரிமையைத் , தங்கள் கைகளிலேயே வைத்துக் கொள்வதற்காக, அதன் இந்தியப் பிறப்பை, மேற்கத்திய மக்களிடையே மறைத்துவிட்ட அராபிய வணிகர்களால், வலங்கம், இந்தியத் துறைமுகங்களிலிருந்தே, அவ்விடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டது. லவங்கம், மலபாரிலும், சீனாவிலும் வளர்கிறது. ஆனால், அதை மேலைநாடுகளுக்குக் கொண்டு சென்ற அராபிய வணிகர்கள் அதன் ஆப்பிரிக்கப் பிறப்புப் பொய்க் கவிதைகளைக் கட்டி வளரவிட்டனர், தெளிவற்ற தன்மையிலும் அறிவுறுத்தும் பகுதி, பிளைனி அவர்களின் எழுத்தில் உளது அவருடைய காலத்தில், மக்களின் பேராதரவு பெற்றிருந்த ஒருவகை லவங்கம் குறித்துத் தோம்னா (Thomna) வைத் தலைநகராகக் கொண்டிருந்த அராபியர்களின் அரசன்,