பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

73


நான்யஹ பந்தா அயனாய வித்யதே என்கிறது ஸ்ருதி) ஆகம நெறியின் முடிந்த முடிவே பக்தி . இறவாப் பெருநிலையை அடைவதற்கான வழி, அவன் மீது இடைவிடாத் தியானம் ஒன்றே ஆம் (அனன்ய சிந்தா) அல்லது ஸ்ரீகிருஷ்ணன் 'வலியுறுத்திக் குறிப்பிட்டுக் கூறுமாறு, ஒருவனைப் பற்றியே சிந்தித்தல், (ஏகபக்தி). உபநிஷதத்தில் கற்பிக்கப்படும் முப்பத்திரண்டு வித்தைகளும், ஒருவன் தன் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதன் முன்னர், அவன் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாட்டு நெறிகளின் வடிவங்களாம்.

ஆகமங்களின், முதலாவதும், இரண்டாவதுமான நூல்கள் (சரியை, கிரியை) சிவன் அல்லது விஷ்ணுவை வழிபடுவதற்கான வழிமுறைகளைக் கூறுகின்றன. ஆனால் பக்தி நெறியின் கட்டுப்பாட்டு நிலைகள், பல இடங்களில் யோகப் பயிற்சி வடிவிலான தத்துவார்த்த கடமைகளையும் உடன் கொள்ள வேண்டியிருப்பதால், ஆகமங்களின் மூன்றாவது நூல், யோகநிலை பற்றிக் கூறுகிறது. ஈண்டு ஞானம் எனக் கூறப்பட்டது, மேலே குறிப்பிடப்பட்ட ஞானம் அன்று. மாறாக, ஆகம நெறிக் கோட்பாடுகளில் புதையுண்டு கிடக்கும் தத்துவார்த்தக் கொள்கைகளை விளக்குவது என்ற பொருள் உடையதாம். இந்தத் தத்துவம், வேதாந்தத் தத்துவத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டது. காரணம், பின்னது, இப்பிரபஞ்சத்திற்குப் பின்னால், ஒரேயொரு உண்மைப் பொருளை மட்டுமே, அதாவது பிரம்மாவை மட்டுமே உண்மை என ஏற்றுக் கொள்கிறது. முன்னது, முப்பொருள் உண்மைகளை "தத்வ த்ரயம்" அதாவது, ஈஸ்வரன், தனி மனிதன், செயல் ஆகியவைகளை, உண்மைப் பொருள்களாம் என ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு ஒவ்வோர் ஆகமமும், யோகபதம், ஞானபதம் என இரண்டைக் கொண்டுள்ளன என்றாலும், உபநிஷதங்கள், ஞானமார்க்கத்தின் சமயத்திருநூல் தொகுதியாதல் போல, ஆகமங்கள், தொடக்கத்தில், பக்தி மார்க்கத்தின் சமயத் நிருநூல் தொகுதியே ஆகும். ஆகமத் திருமுறை நூல் பலர்க்கு உரியதாம். உபநிஷதம், குறிப்பிட்ட சிலர்க்கு மட்டுமே உரியதாம். ஆகம நெறி எளிய நெறி. உபநிஷத நெறி கடின