பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆகமங்களின் தோற்றம்

75


கால்களைக் கொண்ட இழிகுலத்தவராகக் கருதப்பட்டவர். ஆகமங்கள், நான்கு சாதிக் கொள்கையை ஏற்கவில்லை.

ஆனால் உண்மையில் வேதத்தின் ஒரு பகுதியாகிய வேதாந்தம், சூத்திரர்களுக்குக் காட்டப்படாது மறைக்கப் பட்ட ஒரு நூலாகும். இதை உறுதிப்படுத்தும், ஒரு தனிப் பிரிவையே 'பாதராயணம்" கொண்டுளது, காரணம், சூத்திரர்கள், தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும், சடங்கு நெறிகளுக்குத் தகுதி படைத்தவரல்லர், ஆகவே, அவர்கள், வேதங்களை, ஓதவும் கேட்கவும் விலக்கப் பட்டனர். (வேதம் - சூத்திரம் - 1:335-38) ஆகமங்கள் இதற்கு மாறாக, அனைத்து மக்களுக்கும் உரிமையுடையவாம். அதன்படி இன்றும் சிவ தீக்ஷை பெற்ற ஒரு பறையன், அத்தீக்ஷையைப் பிராமணன் ஒருவனுக்குக் கொடுத்து, அப்பிராமணனுக்குக் குருவாகவும் ஆகலாம். ஆகம நெறியாளர்களிடையே சந்நியாச நிலைகளும் பரவலாயின. வைஷ்ணவ சந்நியாசிகள், ஏகாந்திகள்" என்றும், சைவ சந்நியாசிகள், சிவயோகிகள் என்றும் அழைக்கப்பட்டனர்.

ஆகமங்களின் அடிப்படைக் கொள்கைப்படி எல்லா இனத்தவர்க்கும் உரியதான பக்தி நெறி, ஒரு இல்லறத்தானையும், வாழ்க்கைப் பெருங்கடலைக் கடந்து கரை சேர்க்க வல்லதாம் ஆதலின், சந்நியாச நிலை, மோக்ஷம் அடைவதற்கான அடிப்படைத் தேவையன்று. பக்தர்கள் சந்நியாசிகள் ஆகின்றனர் என்றால், அதற்குக் காரணம் யோகப் பயிற்சி, ஆகம நெறியோடு இரண்டறக் கலக்கவில்லை ஆயினும், அதன் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. மேலும், யோகப்பயற்சி, சந்நியாச வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளக் கூடியதாயிற்று.

வைதீக நெறியாளர்க்கும் ஆகம நெறியாளர்க்கும் இடையிலான போட்டி

பண்டை நாட்களில், வைதீக நெறியாளர்களுக்கும், ஆகம நெறியாளர்க்கும், இடையில் பெரும்பகை - கடும்பகை நிலவி இருந்தது. ஆகம நெறியாளர்கள், கடவுள் பெயரால் இரத்தம்