பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழர் பண்பாடு


தற்காலிக மானிட இயல்பு காட்டும் திருவிளையாடல் களுக்கும் உருவம் கொடுத்து வளர்த்தனர். (பாகவத புராணம் குறைந்தது 22 அவதாரங்களைக் குறிப்பிடுகிறது) (பிரம்மா வின் செயல்பாட்டுத்திறன், படைப்புத் தொழிலோடு தீர்ந்து விடுவதால், அவன் உயிர்களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்ல இயலான். ஆகவே, ஆகமங்கள், அவனை இருட்டடிப் புச் செய்துவிட்டன) அப்பிராமணர்கள், 108 வைஷ்ணவ ஆகமங்களையும், 28 சைவ ஆகமங்களையும் இயற்றினர். 77. ஆகமங்களைக் கொண்டிருப்பதாய்ப் பெருமை சாற்றிக் கொள்ளும், சக்திக்கு உரியதான பிறிதொரு ஆகம நெறி பிற்காலத்தே வளர்ச்சி பெற்றது. இக்காலங்களில், சிவ வழிபாடும், கிருஷ்ண வழிபாடும் வழக்காற்றில் இருந்தன என்பதற்குப் பாணினியும் சான்று பகர்கின்றார்.

பையப்பைய, வேதாந்த நெறியும், ஆகம நெறியும், ஒன்றையொன்று ஈர்க்கத் தொடங்கின புராணங்களில் அவை, அடுத்தடுத்து இடம் பெற்றுள்ளன. ஆனால் இரண்டறக் கலந்து ஒன்றாகிவிடவில்லை, சங்கராச்சாரியார் காலத்திலும் (கி.மு. 8 ஆம் நூற்றாண்டு) அவை, ஒன்றாகி விடவில்லை என்பதை நாம் அறிகிறோம். வேதாந்த சூத்திரங்களை விளக்கிக் கூறும் நிலையில், பாசுபத சமயநெறியும், பாஞ்சராத்ர சமய நெறியும் ஒன்றோடொன்று முரண்பட்டவை எனக் கூறுவதில், அவர் பாத்ராயணரைப் பின்பற்றுகிறார் என்றா லும், அவருடைய ‘'பிரபஞ்ச ஹர்தயம்'’ என்ற நூல். உண்மையான ஆகம நூலே ஆகும்.

செவிவழிச் செய்திப்படி, விஷ்ணு, சிவன் சக்தி, கணபதி, சுப்பிரமணியர், சூரியன் ஆகியோர் வழிபாட்டு நெறிகளை முறைப்படுத்தினார். அவற்றிடையே தாம் கண்டு நிறுவிய மதங்கள் பின்பற்றும் வழிபாட்டு முறையினைப் புகுத்தினார் என்ற காரணங்களால், அவர் ஷண்மத ‘ ஸ்தாபனாசாரியர் (அறுவகை மதங்களைக் கண்ட ஆசிரியர்) எனவும் அழைக்கப்பட்டார். இவ்வகையால், தம்முடைய வேதாந்த நூல்களையும், ஆகம நூல்களையும், ஒன்றோடொன்று கலக்க விடாது வேறுபடுத்தியே அவர் வைத்திருந்தார் என்பதைக்