பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

முன்னுரை

தமிழ் நாட்டுத் தனிப்பெருங் காவியங்கள் இரண்டு. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் அறியாத் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள். அவைகள் தமிழர் தம் பண்டைய வாழ்வைப் படம்பிடித்துக் காட்டுவன. அவை இரண்டையும் எளிய நடையில் யாவரும் அறியும் வகையில் எழுதித் தரப் பணிந்தனர் 'டியூகோ' பதிப்பகத்தார். அவர் தம் மொழிவழி முன்னர் கண்ணகி வரலாறு 'கடவுளர் போற்றும் தெய்வம்' என்ற பெயரில் வெளி வந்தது. இதோ, இன்று மணிமேகலை வரலாறு 'ஆருயிர் மருந்து' என்ற பெயரில் வெளிவருகின்றது.

மக்கட் பிறவியின் பயன் மற்றவரை வாழ வைத்து, அவர் தம் வாழ்வுக்கு இன்றியமையாது வேண்டப்படும் உணவு, உடை, உறையுள் வழங்குவதேயாகும் என்பதை அடிப்படையாகக் கொண்டது மணிமேகலைக் காப்பியம், எல்லா அறத்திலும் சோறளிக்கும் அறமே மேலானது என்பதைச் சாத்தனார் பலவிடங்களில் வற்புறுத்துகிறார். அவர் தம் வாக்கு மக்கள் வாழ்விடை மலரின் உலகம் உய்திபெறும். அவ்வுய்தி பெறும் வழிக்கு இந்நூலும் உறுதுணையாக அமையும் என்னும் உறுதியுடையேன்.



தமிழ்க்கலை இல்லம்
சென்னை -10.
20-11-'51
அ. மு. பரமசிவானந்தம்