பக்கம்:ஆருயிர் மருந்து.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆருயிர் மருந்து


கானல் வரிக்குப் பின்

இளமைப் பருவம்

காவிரிக்கரையில் எழுந்த கானல்வரிப் பாட்டால் கருத்து வேறுபட்ட கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து சென்றான். சென்றவன் நடு இரவிலேயே தன் பத்தினி கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை மாநகர் நோக்கிப் புறப்பட்டான். சினத்தோடு பிரிந்த கோவலன் ஒரு வேளை சீற்றம் தணிந்து வருவான் என்று எதிர் நோக்கி இருந்தாள் மாதவி. ஆனால் மறுநாள் அவன் ஊரை விட்டே தன் காதலியுடன் பிரிந்த செய்தி கேட்டுக் கருத்தழிந்தாள். மணி இழந்த நாகமென மதி இருண்டு வருந்தினாள்.

கோவலன் காவிரிப்பூம் பட்டினத்தை விட்டு மதுரைக்குச் செல்வதை அறிந்த மாதவி, ஒரு கடிதம் எழுதிக் கவுசிகன் மூலம் காட்டு வழியில் கோவலனிடம் சேர்க்கச் செய்தாள். அதில் தான் பெற்ற பிரிவுத் துன்பத்தைக் குறித்திருந்தாள். எனினும் கோவலன் திரும்பவில்லை. மனமுடைந்த மாதவி பரத்தமை வாழ்வை வெறுத்தாள். தன் தாயும் மற்றவர்களும் எத்துணை அளவு தேற்றியும் மனமாற்றம் பெற்றாள் இல்லை. தன் பொருட்டு அன்றே