உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. அமைப்பு

இருப்பிடம்

உலகின் தென் கோடியைத் தென்முனை என் பது போல், வட கோடியை வடமுனை என்கிறோம். இம் முனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடல். உண்மையில் இது ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா ஆகிய மூன்று கண்டங்களுக்கும் இடையில் உள்ளது. ஐம்பெருங்கடல்களில் மிகச் சிறியது.

பரப்பு

இதன் பரப்பு 55 இலட்சம் சதுர மைல். ஒரு காலத்தில் ஆழமற்றது என்றும்; உண்மையான கடல் அல்ல என்றும் இது நினைக்கப்பட்டது. ஆனால், இன்று நிலை அப்படியல்ல. அறியப்பட்டடுள்ள இதன் ஆழம் 17,850 அடி. ஆகவே , இதை ஆழமான கடல் என்று கூறலாம்.

இதன் தோற்றம் அல்லது வடிவம் வட்டமாக உள்ளது; கரைகள் தாழ்ந்தவை; தட்டையானவை. இது அமைந்துள்ள மூன்று கண்டங்களின் தாழ்ந்த சமவெளிகளின் தொடர்ச்சிகளே அதன் கரைகள். ஆகவே, அதன் கரைகள் தாழ்ந்துள்ளன.

1–601