உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

பனிக்கட்டி

அண்டார்க்டிக் கடலைப்போல் அல்லாமல், இக்கடல் பகுதியே பனிக்கட்டியால் நிலையாக மூடப்பட்டுள்ளது. இதில் கோடையில் மிதந்து கொண்டிருக்கும் பனிப்பாறைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

இதன் தரை அமைப்பு, அதன் ஆழ்நீர்களை அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் அடையா வண்ணம் தடுக்கிறது.

இதை மூடியிருக்கும் பனிக்கட்டி, பாளங் களாக அமைந்துள்ளன. பாளங்களின் தடிமன் 5 - 50 அடி வரை இருக்கும்.

கிரீன்லாந்தின் மேற்குக்கரையில் பல பனியாறுகள் உள்ளன. இவற்றில் நன்கு அறியப்பட்டது ஹம்போல்ட் பனியாறு. இப்பனியாறு கள் கடலை அடைகின்ற பொழுது உடைந்து, அவற்றின் முனைகள் பனிப்பாறைகளாக மாறுகின்றன.

பனிக் கட்டியின் அடித்தோற்றம் சிதைந்து காணப்படுகிறது. முன்பு நினைத்ததைவிட இக் கடலில் பனிக்கட்டி அதிகம் இருப்பதாகக் கருதப் படுகிறது. பனிக்கட்டியின் சராசரி ஆழம் 10 அடி இருக்கும்.

பனிக்கட்டிப் பாளங்களுக்கு வெளியே பல இடங்களில் நீர் நிலையாக நிற்கிறது. இந்நீர் 9