உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5


நீரோட்டங்கள்

இதில் இரு திறப்பு வழிகள் உள்ளன. ஒன்று பெரியது ; அட்லாண்டிக் கடலோடு சேர்கிறது. மற்றொன்று சிறியது; பசிபிக்கடலோடு சேருகிறது.

முதல் திறப்பின் வழியாக அட்லாண்டிக் கடலுக்கு ஒரு பெரிய நீரோட்டம் செல்கிறது. இதற்கு ஆர்க்டிக் நீரோட்டம் என்று பெயர். மற் றொன்று கல்ப் நீரோட்டமாகும். இதன் கிளைகள் அதன் எல்லைகளுக்குள் ஆழமாக நெடுந்தொலை விற்குப் பரவியுள்ளன.

கண் கொள்ளாக் காட்சி

ஆர்க்டிக் நீரோட்டம் கல்ப் நீரோட்டத்தை நியூபவுண்ட்லாந்து கரைகளுக்கு வெளியே சந்திக்கிறது. இதனால் வியத்தகு நிகழ்ச்சிகள் உண்டா கின்றன. அவை பின்வருமாறு :

ஆர்க்டிக் நீரோட்டத்திற்கு மேலுள்ள குளிர்ந்த பனிக்காற்று, கல்ப் நீரோட்டத் திற்கு மேலுள்ள வெப்பங்கொண்ட ஈரத்தை குளிரச் செய்கிறது. இதனால் மூடு பனி உண்டாகிறது.

கரைகளில் பனிப்பாறைகள் படிந்து, உருகு கின்றன. அவ்வாறு உருகும் பொழுது, அவற்றால் கொண்டுவரப்பட்ட கல்லும் மண்ணும் கரைகளில் படிந்து, மேலும் அவற் றை விரிவாக்குகின்றன.