6
ஆர்க்டிக் நீரோட்டம் கல்ப் நீரோட்டத்தைக் கடந்து, வட அமெரிக்கக் கரையைத் தொட் டுக்கொண்டு ஓடுகிறது. இதனால் ஐக்கிய அமெரிக்காவிற்கு மீன் கள் அதிகமாகக் கிடைக்கின்றன.
கல்ப் நீரோட்டம் வெண்கடலில் கலப்ப தில்லை. ஆகவே, அக்கடல் பல மாதங்களுக்குப் பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும்.
அட்லாண்டிக் கடலின் பக்கத்திலிருந்து, தாழ் வாக அமைந்த அணுகும் வழிகள் இதனோடு தொடர்பு கொள்கின்றன. பசிபிக் கடலிலிருந்து அகலமான பாதைகள் உள்ளன.
வழிகள்
பயண விமானங்கள் துருவ வழியாகச் செல் கின்றன. வடமுனை வழியாக இரு அணு நீர் மூழ்கிக் கப்பல்கள் உறைந்த கடலைக் கடந்து சென்றுள்ளன.
சில ஆண்டுகளில் துருவ வடிநிலத்தின் (Polar basin) வழியாக வாணிப வழிகள், பனிக் கட்டித் தடையில்லாமல் அமையலாம். பனிக் கட்டி மிகுதியாக உள்ளதால் நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டுமே செல்ல இயலும். நீரில் மிதந்து செல்லும் கப்பல்கள் செல்ல இயலாது.
ஆராய்ச்சி
திங்கள் அல்லது சந்திரனின் மறுபக்கம் ஆராயப்படாதது போலவே, பல நூற்றாண்டு-