இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7
களாக ஆர்க்டிக் கடலும் ஆராயப்படாமல் இருந்தது. ஆனால், அண்மைக்கால ஆராய்ச்சியினால் இதைப்பற்றிய அறிவு வளர்ந்துள்ளது. குறிப்பாக, இக்கடல் வெப்பமடைந்து கொண்டு வரு கிறது என்னும் கொள்கை தற்பொழுது உருவாகியுள்ளது. இக்கொள்கை உறுதி செய்யப்படு மானால், உலக வானிலையில் அதனால் பெரும் மாற்றம் ஏற்படலாம். சுருக்கமாக, ஆர்க்டிக் கடலைத் தற்கால மையத் தரைக்கடல் என்று சொல்லலாம்.