பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

—90° F அளவுக்குக் குறையும். கோடையில் பனியும் பனிக்கட்டியும் உருகுவதால், வெப்பநிலை 70° F அளவுக்கு மேல் இருக்கும்.

குறுகிய கோடைகளில் நிலப் பகுதியின் பனிக்கட்டி பெருமளவுக்கு உருகும். அதன் சில பகுதிகளில் காய்கறிகள், பெரிகள், பூக்கள் முதலியவை பயிரிடப்படுகின்றன. கோடையில் பார்க்கக் கடற்கரை ஆளற்றதாயும் மரம் இல்லாததாயும் காணப்படும். மாரிக்காலம் பனிக்கட்டி உருகித் துந்திர வெளியைச் சதுப்புச் சமவெளி யாக்கும். இவ்வெளியில் புல், லைக்கன், பாசி, காட்டுப் பூக்கள், தாழ்ந்த புதர்கள் முதலியவை காணப்படும். புதர்களின் மேல் வண்ணத்துப் பூச்சி முதலியவை மொய்க்கும்.

கடல் நாய்கள், துருவக் கரடிகள், மீன்கள் முதலியவை ஆர்க்டிக் பகுதியில் வாழ்பவர்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. திமிங்கிலங்களும், கஸ்தூரி எருதும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகின்றன. கலைமான்கள் நிறைய உள்ளன. கீரிகள், கஸ்தூரி எலிகள், நரிகள், முயல்கள் முதலியவை கண்ணி வைத்துப் பிடிக்கப்படுகின்றன. நிலப் பறவைகளும் கடற் பறவைகளும் அதிகமுள்ளன.

பொதுவாக, ஆர்க்டிக் விலங்குகளின் வகை கள் அதிகமில்லை. ஆழ்கடல் மீன்களின் வகைகள் - அதிகமுள்ளன. வட கடல்களில் நண்டு நத்தை, ஜெல்லி மீன், புழுக்கள் முதலியவை உள்ளன. அக்-