ஆராய்ச்சி தொடங்குதல்
புது வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் - சீனா விற்கும் இந்தியாவிற்கும் - வட முனையை அடைய வேண்டும், அங்குள்ள நிலப் பகுதிகளை ஆராய வேண்டும் என்னும் அடிப்படையில்தான் ஆர்க்டிக் ஆராய்ச்சி தொடங்கிற்று.
முதல் பயணிகள்
ஆர்க்டிக் பகுதிக்குச் சென்ற முதல் பயணிகள் நார்வே நாட்டுக்காரர்கள் ஆகும். அவர்கள் ஐஸ்லாந்து, கிரீன்லாந்து ஆகிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றைக் குடியேறத் தகுந்த பகுதிகளாகச் செய்தனர்.
பெத்தியாஸ் என்பார் கிரேக்க ஆராய்ச்சி யாளர். இவர் கி.மு. 325 - இல் பயணத்தை மேற் கொண்டவர். முதன் முதலில் உலகத்தைச் சுற்றி யவர். இவர்தான் ஆர்க்டிக் வட்டத்தைத் தம் பயணத்தில் முதலில் தொட்டுச் சென்றவர். நார்வே நாட்டுக்காரர்களுக்கு முன்பு, இவரே ஆர்க்டிக் வட்டத்திற்கு அருகில் சென்றவர்.
புத்துயிர் பிறத்தல்
15- ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரும் டச்சுக்காரர்களும் கடற் பயணங்களைத் தொடங்கினர். மற்ற நாடுகளும் அவற்றைப் பின்பற்றின.
1-A- 601