பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

23


1926 இல் பயர்டு என்பார் ஸ்பிட்ஸ்பர்கன் என்னுமிடத்திலிருந்து விமானம் மூலம் வட முனைக்குச் சென்று வெற்றியுடன் திரும்பினார்.

வில்கின்ஸ்

1928 இல் சர் ஹயூபர்ட் வில்கின்ஸ் என்பார் ஸ்பிட்ஸ்பர்கன் என்னுமிடத்திலுள்ள ‘டெட் மேன்’ தீவை அலாஸ்காவிலிருந்து விமான மூலம் அடைந்தார். செல்வதற்கான நேரம் 20½ மணி. அப்பகுதியில் கப்பல் போக்குவரத்து, வானிலை ஆகியவை பற்றி ஆராய்ந்தார்; உற்று நோக்கல்கள் செய்தார்.

உருசியர்

1930 ஆம் ஆண்டிலிருந்து உருசியர்கள் வட முனையை விரிவாக ஆராயத் தொடங்கினர். 1936 இல் நீர்நூல் தொடர்பாக ஒரு பயணம் மேற் கொள்ளப்பட்டது. 1937 இல் சோவியத்து அரசு வடமுனையில் நிலையம் ஒன்றை அமைத்தது. இதே ஆண்டில் உருசிய விமானிகள் இரு தடவைகள் வடமுனை வழியாக மாஸ்கோவிலிருந்து அமெரிக்காவிற்குப் பறந்து சென்றனர்.

1937-38 ஆம் ஆண்டுகளுக்கிடையே சோவி யத்து நாட்டைச் சார்ந்த பேராசிரியர் ஆட்டோ ஸ்கிமிட் என்பார் தலைமையில் பயணம் ஒன்று நடைபெற்றது. இப் பயணத்தின் முடிவுக்கேற்ப, வடமுனையில் நிலவும் கோடையின் தட்ப வெப்ப நிலை முன்பு நினைத்ததைவிடச் சீரானது என்பது

2–601