பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. பனி வெளிப் பாசறை

இடம்

உலகின் ஒரு கோடியான வட முனையிலிருந்து 800 மைல் தொலைவில் கிரீன்லாந்து என்னுமிடம் உள்ளது. ஆர்க்டிக் பகுதியில் உள்ளதால் கிரீன்லாந்து பனிக்கட்டி நிரம்பியது. இங்கு அமெரிக்கா ஒரு பாசறையை அமைத்துள்ளது. இதற்கு ‘கேம்ப் சென்ச்சுரி’ என்று பெயர்.

நோக்கம்

துருவ ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை அமெரிக்கா வகுத்துள்ளது. இத் திட்டங்களை நிறைவேற்ற இப்பாசறை அமைக்கப்பட்டுள்ளது.

காலம்

பனிக்கட்டியின் இயக்கத்தினால் பாசறை கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைய வல்லது. ஆகவே, பாசறையில் தங்கும் காலம் 10 ஆண்டு ஆகும். இக்காலத்திற்கு மேலும் தங்கலாம். ஆனால், நீண்ட காலம் தங்குவதற்கில்லை.

அமைத்தல்

ஆழமான அகழிகளால் ஆனதே பாசறை. எந்திரத்துணையுடன் ஆழமான அகழிகள் வெட்டப்பட்டன. வளைந்த தகடுகள் அகழிகளின் மீது போடப்பட்டன. தகடுகள் போதுமான அளவு