பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26


உயரத்திற்கு இளகலான பனிக்கட்டியால் மூடப் பட்டன. பனிக்கட்டி இறுகியதும், தகடுகள் அகற்றப்பட்டன. வளைந்த கூரைகளுடன் அமைந்த குகைகள் உண்டாயின.

இக் குகைகளில் முன்னரே ஆயத்தம் செய்து வைக்கப்பட்ட கட்டடங்கள் பொருத்தப்பட்டன. இக் கட்டடங்களில் மின்னாற்றல் நிலையங்கள், தங்குமிடங்கள், உணவு அருந்தும் இடம், சமையலறை, ஆய்வுக்களங்கள், பண்டசாலை முதலியவை அமைக்கப்பட்டுள்ளன. பாசறையில் 200 பேர் தங்கலாம். வெப்பம், ஒளி, ஆற்றல் அளிப்பதற் காகப் பாசறையில் அணு ஆற்றலால் இயங்கும் எந்திரம் ஒன்றுள்ளது.

அழியா அரண்

பாசறை ஓர் அழியா அரண் ஆகும். ஆர்க்டிக் வானிலையும் அதைத் தாக்குதற்கு ஆற்றலற்றது. பாசறையின் முகப்பில் பனி பெய்த வண்ணம் இருக்கும். அதை அடிக்கடி அகற்றிக் கொண்டிருக்க வேண்டும். பாசறையின் உள்ளே பனி விழுவதற்கு வழி இல்லை.

பாசறையின் உள்ளே ஒரே அமைதி நிலவும். இந்த அமைதியை அங்கு ஒரு மணிக்கு 100 மைல் விரைவில் அடிக்கும் புயற்காற்றுகள் கூடக் குலைக்க முடியாது.

குளிர்காலத்தில் பாசறையின் உட்புறத்தின் வெப்பநிலை வெளிப்புறத்தின் வெப்பநிலையை