பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களிலும் பாசறைகளை அமைக்கலாம். இதன் அடிப்படையில், அமெரிக்கப் போர்ப்படையினர் பல திட்டங்களை மேற்கொண்டு நடத்திய வண்ணம் உள்ளனர். கடுங்குளிர் நிலவும் துருவப் பகுதிகளில் வாழ்வது என்பது இயலாத செயல். இதற்குப் பாசறை அமைப்பு தீர்வாக உள்ளது.

பாசறை அமைப்பதே ஒரு சிக்கலான செயல்; ஆராய்ச்சிக்குரியது. இத்திட்டத்தின் சிறு பகுதியே போர்ச் சிறப்புக் கொண்டது. பெரும் பகுதி விஞ்ஞான ஆராய்ச்சிச் சிறப்புடையது. போர்ச் சிறப்பைப் பொறுத்த வரை, போர் வீரர்கள் எவ்வாறு வாழ இயலும், எப்படிப் போர் செய்ய இயலும் என்பது ஆராயப்படுகிறது.

விஞ்ஞானச் சிறப்பைப் பொறுத்த வரை பல வாய்ப்புக்கள் உள்ளன. விஞ்ஞான வளர்ச்சிக்கும், சிறப்பாக, அண்டார்க்டிக் பகுதிகள் பற்றிய அறிவு விரிவடையவும் ஆர்க்டிக் ஆராய்ச்சி உதவும். அதன் பாழ் நிலப் பகுதிகளை மக்கள் குடியேறும் பகுதிகளாக மாற்றலாம். அவற்றிலுள்ள கனிவளங்களையும் கச்சாப் பொருள்களையும் பெருமளவுக்குப் பயன்படுத்தலாம்.

கிரீன்லாந்து உட்பகுதியிலிருந்து பெருமள வுக்குப் பனிக்கட்டி அதன் தீவின் கரை முடிவுப் பகுதிகளுக்கு மெதுவாக நகர்ந்து செல்கிறது. இப் பனிக்கட்டி இயக்கம் அளக்கப்பட்டிருக்கிறது; ஆராயப்பட்டிருக்கிறது. பனிக்கட்டி-