பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யின் ஆழங்கள் சராசரி 7,000 அடி. சில இடங்களில் ஆழம் 10,000 அடிக்கு மேலும் உள்ளது. இந்த ஆழங்களைப்பற்றி ஆராய்வதால் பனிக்கட்டியின் இயல்புகளையும் அதிலுள்ள நிலப் பகுதியையும் கண்டறியலாம்.

ஆழமான பனிக்கட்டியின் மீது போக்கு வரவு நடத்த இயலுமா என்று ஆராயப்படுகிறது. சக்கரமுள்ள வண்டிகளைப் பயன்படுத்த இயலுமா என்று ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.

பனிக்கட்டியால் செய்யப்பட்ட வளைவுகள், உத்திரங்கள் முதலியவற்றின் வலிமை ஆராயப் படுகின்றது. வானிலை நிலையங்கள் பல, காற்றுகள், வானிலை, கதிரவன் வீச்சு, காற்று மேல் வெளி நிலைமைகள் முதலியவை பற்றி ஆராய்ந்த வண்ணம் உள்ளன.

நிலவுலகிலுள்ள எந்தச் சூழ்நிலையையும் மனிதன் தாக்குப் பிடிக்க இயலும். இந்தச் சூழ் நிலையைத் தாக்குப் பிடிக்க அவன் பழகினால், எதிர் காலத்தில் மற்றக் கோள்களின் சூழ் நிலையையும் தாக்குப் பிடிப்பதற்குரிய ஆற்றலும் பழக்கத்தால் வரும். பழக்கத்தால், பயிற்சியால் கடுமையான வான்வெளி நிலைமைகளை மனிதன் தாக்குப் பிடித்து, வான்வெளியில் வலம் வந்ததை நாம் நன்கு அறிவோம். வான்வெளி ஆராய்ச்சிக்கு உறுதுணையாக ஆர்க்டிக் ஆராய்ச்சியும் அமையும்.