பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

தாடை எலும்புகளும், நீண்ட, கறுத்த மயிரும் இவர்களது உடல் இயல்புகள் ஆகும்.

இவர்கள் மிகத் தூய்மையாக இருப்பவர்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள் ; நேர்மையும் நாணயமும் கொண்டவர்கள். இருப்பதைக் கொண்டு இனிய, எளிய வாழ்க்கை நடத்துபவர்கள்.

இவர்களில் பலர், இன்றும், தங்கள் முன்னோர் வாழ்ந்தது போலவே வாழ்கின்றனர். ஆனால், பலர் வெள்ளையர் நடை உடை பாவனைகளைப் பின் பற்றியுள்ளனர்.

அலாஸ்காவிலுள்ள அமெரிக்க அரசும், கிரீன்லாந்திலுள்ள டேனிஷ் அரசும், கனடிய அரசும் இவர்களுக்குக் கல்வி புகட்டும் நற்பணியிலும், பொது நலத்தை மேம்படுத்துவதிலும் ஈடுபட்டுள்ளன.

தொழில்

முன்பு வேட்டையாடுதல் மீன் பிடித்தல் மட்டுமே இவர்களது தொழிலாக இருந்தன. பின்பு பலர் வாணிபம் செய்யத் தொடங்கினர். தங்களிடமுள்ள மென்மயிருள்ள தோல்கள், திமிங்கில எலும்பு முதலியவற்றை வெள்ளையரிடம் கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கலாயினர்.

துப்பாக்கி சுடுவதில் இவர்களுக்கு நல்ல தேர்ச்சி உண்டு. இதனால், விலங்குகளை அதிக-