பக்கம்:ஆர்க்டிக் பெருங்கடல்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மாகக் கொன்றதினால், இவர்களுக்கு வேண்டிய உணவும், மென்மயிர்த் தோல்களும் கிடைக்காமல் போயின. இதை ஒருவாறு ஈடு செய்ய அமெரிக்க அரசு கலைமான்களை வழங்கி, அவற்றை வளர்க்கக் கற்றுக் கொடுத்தது. அவற்றிலிருந்து தங்களுக்கு வேண்டிய இறைச்சியையும், தோல்களையும் பெறத் தொடங்கினர்.

இவர்களில் சிலர் உணவுப் பண்டங்கள் பதனிடும் அமெரிக்கத் தொழிற்சாலைகளிலும், கட்டடம் கட்டும் இடங்களிலும் வேலை செய்கின்றனர்.

உணவு

பச்சை இறைச்சி, மீன், எண்ணெய் முதலியவை இவர்களது முக்கியமான உணவுப் பண்டங்கள். கடல் நாய்கள், நீர் யானை, திமிங்கிலம் முதலியவை இவர்கள் உண்ணும் கடல் விலங்குகள். நிலப் பகுதியிலுள்ள எருது, கரடி, முயல் முதலியனவும் இவர்கள் உண்ணும் விலங்குகளே. ஈட்டி கொண்டு இவர்கள் விலங்குகளை வேட்டை யாடுவர்.

தாவரத்தின் தண்டுகளும் காய்களும் கோடையில் இவர்களுக்கு உணவாகப் பயன்படும்.

உடை

வழக்கப்படி ஆண்கள் கால்சட்டைகளையும், ஜாக்கெட்டுகளையும், பூட்ஸ்களையும் (boots) அணிந்து கொள்வர். இவற்றையே பெண்களும்