34
அகல் போன்ற ஒரு பாண்டத்தில் எண்ணெயை ஊற்றுவார்கள். அதில் காய்ந்த ஒரு பாசியைப் போட்டுத் திரியாகப் பயன்படுத்தி எரிப்பார்கள். இதுவே எஸ்கிமோக்களுடைய விளக்காகும்.
போக்கு வரத்து
நிலப் போக்குவரத்து சறுக்கு வண்டிகள், கலைமான்கள் ஆகியவற்றின் வாயிலாக நடை பெறுகிறது. சறுக்கு வண்டிகளைப் பனிக்கட்டியின் மீது நாய்கள் இழுக்கும். பொதிகளை, மூட்டை முடிச்சுகளைக் கலைமான்கள் சுமக்கும்.
நீர்ப் போக்கு வரத்துக்குப் படகுகள் அல்லது தோணிகள் பயன்படுகின்றன. இவை இரு வகைப்படும். அவற்றில் கயாக் என்பது ஒன்று. எலும்பு அல்லது மரத்தின் மீது தோலால் மூடப் பட்டது இது. ஒருவர் வேட்டையாடுவதற்கு மட்டும் ஏற்றது.
மற்றொன்று உமியாக் என்னும் குடும்பப் படகு. இதில் எஸ்கிமோக்களின் குடும்பங்கள் செல்லும்.
பழக்கவழக்கங்கள்
வேட்டையாடுவதில் ஆண் பெண் அனைவரும் ஈடுபடுவர். அவர்களுக்கிடையே சண்டைகள் எழுவதும், அவைகள் தீர்க்கப்படுவதும் மிக